கனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்

கனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்
கனடாவில் 'கிங் மேக்கர்' ஆகும் சிங்

கனடா பொதுத்தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கு ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்காத நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜக்மீத் சிங் கிங் மேக்கராக மாறியுள்ளார்.

338 உறுப்பினர்களை கொண்ட கனடா நாடாளுமன்றத்துக்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி 156 இடங்களை கைப்பற்றியுள்ளது. ஆட்சி அமைக்க 170 இடங்கள் தேவை என்பதால் சிறிய கட்சிகளின் ஆதரவுடனே ட்ரூடோ ஆட்சி அமைக்கிறார். இந்த‌நிலையில் 24 இடங்களை கைப்பற்றியுள்ள புதிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங், புதிய அரசு அமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பார் என சொல்லப்படுகிறது. இந்த தேர்தலில் இவரது கட்சி நான்காம் இடத்தை கைப்பற்றியுள்ளது.

அடுத்த 4 ஆண்டுகளுக்கு 47 வயதான ஜஸ்டின் ட்ரூடோவே கனடாவின் பிரதமராக நீடிக்க போகிறார். எனினும் கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இம்முறை ட்ரூடோவின் செல்வாக்கு குறைந்திருப்பது தேர்தல் முடிவுகளில் பிரதிபலித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com