\
தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம்: யாழ்ப்பாண பல்கலை. காலவரையின்றி மூடல்

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம்: யாழ்ப்பாண பல்கலை. காலவரையின்றி மூடல்

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம்: யாழ்ப்பாண பல்கலை. காலவரையின்றி மூடல்
Published on: 

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. 

இலங்கை சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தங்களுக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இம்மாதம் 12-ம் தேதி முதல் சிறைகளில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, இந்த மாத இறுதியில் தொடங்கி வருகிற நவம்பர் முதல் வாரத்திற்குள் அதிபரின் பொதுமன்னிப்பு மூலம் விடுதலை செய்யப்படுவார்கள் என இலங்கை அரசு தெரிவித்தது. ஆனால் இந்த உத்தரவாதத்தை அதிபர் நேரடியாக அறிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, கைதிகள் தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.

இந்நிலையில், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு ஜனாதிபதி பதிலளிப்பதாக வழங்கிய காலக்கெடு நிறைவடைந்த நிலையில், பல்கலைக்கழக மாணவர்கள் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com