ஓரினச்சேர்க்கையால் வீதிக்கு வந்த ஜாக்கிசான் மகள்
ஓரினச்சேர்க்கை பழக்கத்தால் வீட்டில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சானின் மகள், ஹாங்காங்கில் சாலையோரத்தில் உள்ள ஒரு மேம்பாலத்துக்கு கீழே பரிதாபமான நிலையில் வசித்து வருகிறார்.
ஜாக்கி சானின் மகள் எட்டாவும், அவரது தோழி ஆன்டியும் இணைந்து யூ டியூப்பில் வெளியிட்டுள்ள குறுகிய காணொலியில் தங்களது பரிதாப நிலையை விளக்கி உதவிக்கரம் நீட்டும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். அதில் ஓரினச் சேர்க்கை மீதான அச்சம் காரணமாக பெற்றோர்கள் தங்களை வீட்டில் இருந்து வெளியேற்றி விட்டதாக சோகத்துடன் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு மருத்துவமனை, காவல்துறை, உணவு வங்கிகள், ஓரினச் சேர்க்கை சங்கம் என பல இடங்களுக்கு சென்றும் ஒருவரும் அடைக்கலம் கொடுக்காததால், மேம்பாலத்துக்கு கீழே வசித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
ஜாக்கி சான் தனது மனைவி ஜோன் லினை திருமணம் செய்து கொள்வதற்கு முன் முன்னாள் அழகி எலைன் என்பவருடன் வாழ்ந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. அவரது பெண்தான் இந்த எட்டா என்பது குறிப்பிடத்தக்கது.