மாயமான சமூக ஆர்வலர்: கண்டுபிடிக்கக்கோரி ஆயிரக்கணக்கானோர் போராட்டம்

மாயமான சமூக ஆர்வலர்: கண்டுபிடிக்கக்கோரி ஆயிரக்கணக்கானோர் போராட்டம்

மாயமான சமூக ஆர்வலர்: கண்டுபிடிக்கக்கோரி ஆயிரக்கணக்கானோர் போராட்டம்
Published on

அர்ஜென்டினாவில் கைதான நிலையில் மாயமான சமூக ஆர்வலர் சான்டீயாகோ மால்டொனாடோவை கண்டுபிடித்து தரக்கோரி தலைநகர் பியூனோஸ் அயர்ஸில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர்.

இத்தாலிய ஜவுளி நிறுவனத்துக்கு நிலம் ஒதுக்குவதற்காக, பாரம்பரியமாக வாழ்ந்து வந்த மக்களை அந்நாட்டின் தெற்குப் பகுதியில் இருந்து அரசு அப்புறப்படுத்தியது. இதற்கு கண்டனம் தெரிவத்து சமூக ஆர்வலர் சான்டீயாகோ மால்டெனாடோ போராட்டம் நடத்தினார்.

கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி சாலை மறியலில் ஈடுபட்ட சான்டீயாகோவை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்தனர். அதன் பின் இருமாதங்களாக எந்தவொரு பொதுநிகழ்ச்சியிலும் அவர் தென்படவில்லை. இதனால் அவர் மறைத்து வைக்கப்பட்டாரா? அல்லது கொல்லப்பட்டாரா? என்ற அச்சம் அந்நாட்டு மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. இந்தச் சூழலில் மாயமான சான்டீயாகோவை கண்டுபிடிக்க, உடனடியாக நடவடிக்கை எடுக்கக் வேண்டும் என தலைநகர் பியூனஸ் அயர்ஸில் ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com