\
கமலா ஹாரிஸ்
கமலா ஹாரிஸ்புதிய தலைமுறை

வாவ்... சூப்பர்... விவசாய நிலத்தில் வரையப்பட்ட கமலா ஹாரிஸின் உருவம்

இத்தாலி நாட்டைச் சேர்ந்த டாரியோ கெம்பரின் எனும் நபர், கமலா ஹாரிஸின் உருவத்தை பிரமாண்டமாக வரைய முடிவெடுத்தார். இதற்காக சாலையோரம் உள்ள விவசாய நிலத்தில் டிராக்டரை கொண்டு அவரது உருவத்தை உருவாக்கினார்.
Published on: 

அமெரிக்க அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸின் உருவத்தை, நபர் ஒருவர் விவசாய நிலத்தில் பிரமாண்டமாக உருவாக்கியுள்ளார்.

இத்தாலி நாட்டைச் சேர்ந்த டாரியோ கெம்பரின் எனும் நபர், கமலா ஹாரிஸின் உருவத்தை பிரமாண்டமாக வரைய முடிவெடுத்தார். இதற்காக சாலையோரம் உள்ள விவசாய நிலத்தில் டிராக்டரை கொண்டு அவரது உருவத்தை உருவாக்கினார். நிலத்தை உழுது, அவர் வரைந்த இந்த ஓவியம்
கழுகு பார்வையில் காட்சிப்படுத்தப்பட்டு காண்போரை
வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

கமலா ஹாரிஸின் பேச்சுகளால் ஈர்க்கப்பட்டு இதனை தான் செய்ததாக டாரியோ கெம்பரின் தெரிவித்துள்ளார். அமெரிக்க
அதிபர் தேர்தல் நெருங்கும் சூழலில், ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ் போட்டியிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com