இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பு?

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பு?
இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பு?

இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விரைவில் பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகியதைத் தொடர்ந்து, புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளில் அதிபர் கோட்டாபய தீவிரம் காட்டி வருகிறார். புதிய அரசு அமைப்பது தொடர்பாக பல்வேறு கட்சிகளின் தலைவர்களை அவர் அழைத்துப் பேசி வருகிறார். அந்த வகையில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை, பிரதமர் பதவியை ஏற்க வருமாறு பலமுறை அழைப்பு விடுத்தும் பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்து அவர் அதனை தவிர்த்தார்.

இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், இலங்கை முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, அதிபர் கோட்டாபயவை சந்தித்துப் பேசியுள்ளார். பிரதமர் நியமனம் தொடர்பாக இருவரும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க இன்று அல்லது நாளை பதவியேற்கக்கூடும் என இலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடைய ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.க்கள் பெரும்பாலானோர் விக்கிரசிங்கவுக்கு ஆதரவு அளிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com