\
புத்தாண்டில் நிகழ்ந்த சோகம்.... பயங்கரவாதி நடத்திய தாக்குதலில்‌ 35 பேர் பலி

புத்தாண்டில் நிகழ்ந்த சோகம்.... பயங்கரவாதி நடத்திய தாக்குதலில்‌ 35 பேர் பலி

புத்தாண்டில் நிகழ்ந்த சோகம்.... பயங்கரவாதி நடத்திய தாக்குதலில்‌ 35 பேர் பலி
Published on

துருக்கியில் இரவு விடுதியில் பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 35 பேர் உயிரிழந்தனர்.

துருக்கி இஸ்தான்புல் நகரில் உள்ள ரெய்னா இரவு விடுதியில் 700-க்கும் மேற்பட்டோர் புத்தாண்டு தினத்தை கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது, சுமார் 1 மணியளவில் சாண்டா கிளாஸ் உடையில் அங்கு வந்த பயங்கரவாதி, கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில், பொதுமக்கள், காவலர்கள் என 35 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து, அருகில் உள்ள ஆற்றில் குதித்து தப்பிச் சென்ற பயங்கரவாதியை காவல்துறையினர்‌ தேடி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com