உயர் மின் அழுத்த கம்பிவடத்தில் மின்சாரத்தை நிறுத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படாத காரணத்தால் சென்னை மணலியில் இருந்து ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு ராட்சத பாய்லர் கொண்டு செல்லுமுடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
இஸ்ரோவிற்காக திருவொற்றியூரில் இருந்து கடந்த மாதமே சென்றிருக்க வேண்டிய இந்த பாய்லர் கொண்டு செல்ல முடியாததற்கு காரணம் வழியில் உள்ள உயர் மின் அழுத்தக் கேபிள்கள்தான். ஏற்கனவே தனியார் நிறுவனம் சார்பில் இந்த பாய்லர் லாரி மூலம் எடுத்துச் செல்லும்போது மட்டும் மின்சாரத்தை நிறுத்தக் கோரி மின்வாரியத்திடம் அனுமதி கோரியபோது 55 லட்சம் கட்டணத்தை செலுத்த மின்வாரியம் அறிவுறுத்தியது. இந்நிலையில் தனியார் போக்குவரத்து நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.