வெளியேறலாம் என்ற உத்தரவையும் போட்டுவிட்டு வெளியேற முயன்றவர்கள் மீது தாக்குதலையும் நடத்திய இஸ்ரேல்?

தொடர் தாக்குதலால் காஸாவின் ராஃபா எல்லை வழியாக எகிப்து நாட்டிற்குள் செல்ல முயன்றவர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இஸ்ரேல் தாக்குதல்
இஸ்ரேல் தாக்குதல் PT

காஸாவில் சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எகிப்து, இஸ்ரேல், அமெரிக்கா இடையே நடந்த பேச்சுவார்த்தையில் வெளிநாட்டினரை மீட்பதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் காஸாவில் இருந்து ராஃபா எல்லை வழியாக எகிப்து நாட்டிற்குள் வெளிநாட்டவர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வடக்கு காஸாவில் இருந்து பாலஸ்தீனியர்கள் வெளியேற இஸ்ரேல் கெடு விதித்துள்ள இந்தச் சூழலில், மூன்று நாடுகள் இடையே ஏற்பட்டுள்ள இந்த உடன்பாட்டால் வெளிநாட்டினர் வெளியேற வாய்ப்பு கிடைத்துள்ளதாக எகிப்து அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல்-ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக பாலஸ்தீனியர்கள் மட்டுமின்றி, பல்வேறு வெளிநாட்டினரும் சிக்கியுள்ள சூழலில் மனிதாபிமான அடிப்படையில் எகிப்து அரசு இந்நடவடிக்கைக்கு ஒப்புக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக தொடர் தாக்குதலால் காஸாவின் ராஃபா எல்லை வழியாக எகிப்து நாட்டிற்குள் செல்ல முயன்றவர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com