\
Israel’s newly elected parliament is already moving against Netanyahu
benjamin netanyahuReuters

இஸ்ரேல் அரசியலில் Twist.. இடிந்து போன நெதன்யாகு.. வரலாறு காணாத அதிரடி மாற்றம்!

இஸ்ரேல் அரசியலில் மிகப்பெரிய ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது.. இந்த புதிய நடவடிக்கையால் இடைக்கால பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இடிந்து போயிருப்பதாகக் கூறப்படுகிறது.
Published on: 

செய்தியாளர் - கார்த்திகேயன்

இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசட்டில் உள்ள 120 உறுப்பினர்களுக்கான தேர்தல், கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி அன்று நடைபெற்றது. இதில், பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணி 53 இடங்களை கைப்பற்றிய நிலையில், ஐசன்கோட் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி 48 இடங்களை வென்றது. மேலும், அரபு கட்சிகள் மீதமுள்ள 19 இடங்களில் வெற்றியைப் பெற்றன. வழக்கம்போல, பெரும்பான்மைக்கு தேவையான 61 இடங்களை எந்தவொரு கூட்டணியும் கைப்பற்ற முடியாததால், ஆட்சி அமைக்க முடியாத சூழல் உருவானது. எதிர்க்கட்சியான ஐசன்கோட் கூட்டணிக்கு அரபு கட்சிகள் ஆதரவு அளிப்பதாக கூறியதைத் தொடர்ந்து, ஆட்சி அமைக்க அந்நாட்டு அதிபர் 6 வாரங்கள் அவர்களுக்கு அவகாசம் வழங்கியுள்ளார்.

benjamin netanyahu
benjamin netanyahuReuters

இப்படியான சூழ்நிலையில், இஸ்ரேலின் புதிய நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் இடைக்காலப் பிரதமரான பெஞ்சமின் நெதன்யாகுவின் அதிகாரத்தைக் குறைக்கவும், அவரது கொள்கைகளைத் தலைகீழாக மாற்றவும், பல்வேறு நடவடிக்கைளை ஐசன்கோட் கூட்டணி மேற்கொண்டு வருகிறது. நாடாளுமன்றத்தின் சபாநாயகராக நெதன்யாகுவின் ஆதரவாளர் அமீர் ஓஹானா இருந்து வந்தார். புதிய உறுப்பினர்கள் மேற்கொண்ட தீர்மானங்கள் மூலமாக, தற்போது அவர் பதவி நீக்கப்பட்டு, புதிதாக மாடன் கஹானா என்பவர் சபாநாயகராக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இதன்மூலம், நெதன்யாகுவின் அரசாங்கத்திற்கு எதிரான மசோதாக்களை விரைவாக நிறைவேற்ற முடியும். இதுமட்டுமின்றி, பிரதமரின் பதவிக் காலத்திற்கு உச்சவரம்பு நிர்ணியப்பது, நீதித்துறையின் அதிகாரங்களை கட்டுப்படுத்த நெதன்யாகு கொண்டு வந்த மாற்றங்களை ரத்து செய்வது, அக்டோபர் 7 தாக்குதல்களுக்குப் பிந்தைய நிலைமைகளைக் கையாள்வதில் நெதன்யாகுவின் தோல்விகளைக் கண்டிப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன. தற்போது வெற்றிப் பெற்றுள்ள ஐசன்கோட்டின் கூட்டணி கட்சிகளுக்கு இடையே, அரபு கட்சிகளை தங்களுடன் சேர்த்துக் கொள்வதில் சில முரண்பாடுகள் இருந்தது.

Benjamin Netanyahu
Benjamin Netanyahureuters

இந்த முரண்பாட்டை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, நெதன்யாகு ஆட்சியமைக்க முயற்சி செய்தார். ஆனால், கடைசி நேரத்தில் அவரது கனவு நிறைவேறாமல் போனதோடு, தற்போது பலத்த அரசியல் பிரச்னைகளையும் சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது.