''அணுகுண்டு வீசப்படும்'' - சர்ச்சையாக பேசி தன் பதவிக்கு வேட்டு வைத்துக் கொண்ட இஸ்ரேல் அமைச்சர்!

காசா மீது அணுகுண்டு வீசுவது சாத்தியம் என சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த இஸ்ரேல் அமைச்சர் "அமிஹாய் எலியாஹு" அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அமிஹாய் எலியாஹு
அமிஹாய் எலியாஹுpt desk

காசா மீது அணுகுண்டு வீசுவது சாத்தியம் என சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த இஸ்ரேல் அமைச்சர் "அமிஹாய் எலியாஹு" அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாகவும், இஸ்ரேல் அரசின் அனைத்து பொறுப்பில் இருந்தும் விடுவிக்கப்படுவதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Israel Gaza war
Israel Gaza warpt desk

இஸ்ரேவின் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்துள்ளது.. இதில் 3886 பேர் குழந்தைகள் என பாலஸ்தீன சுகாதாரத்துறை கூறுகிறது. இந்த தாக்குதலில் 32,500 பேர் காயம் அடைந்துள்ளதாக சுகாதாரத்துறையினர் கூறுகின்றனர். கடந்த அக்டோபர் 7ம் தேதி தொடங்கிய போர், இன்று வரை தொடர்ந்து வரும் நிலையில், காஸாவில் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். 

காசா மக்கள் பாலைவனப் பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றும் இல்லையெனில் அணுகுண்டு வீசப்படும் என இஸ்ரேலின் பாரம்பரிய துறை அமைச்சர் அமிஹாய் எலியாஹு தெரிவித்து இருந்தார்.

அவரது இந்தக் கருத்துக்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், தனது கருத்து திரித்து கூறப்பட்டதாக விளக்கம் தெரிவித்த அமிஹாய் தற்போது நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com