இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பிரான்ஸ் அதிபர் மேக்ரான்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பிரான்ஸ் அதிபர் மேக்ரான்pt web

“ராணுவ தளவாட ஏற்றுமதியை நிறுத்த வேண்டுமா? வெட்கமாக இருக்கிறது”-பிரான்ஸ் அதிபரை விமர்சித்த நெதன்யாகு!

இஸ்ரேலுக்கான ராணுவ தளவாட ஏற்றுமதியை நிறுத்தவேண்டும் எனக்கூறிய பிரான்ஸ் அதிபரை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விமர்சித்துள்ளார்.
Published on

இஸ்ரேலுக்கான ராணுவ தளவாட ஏற்றுமதியை நிறுத்தவேண்டும் எனக்கூறிய பிரான்ஸ் அதிபரை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விமர்சித்துள்ளார்.

இஸ்ரயேல் பிரதமர் - பென் ஜமின் நெதன்யாகு
இஸ்ரயேல் பிரதமர் - பென் ஜமின் நெதன்யாகு முகநூல்

இதுகுறித்து வீடியோ செய்தி வெளியிட்ட பிரதமர் நெதன்யாகு, ராணுவ தளவாட ஏற்றுமதியை நிறுத்த வலியுறுத்தும் தலைவர்களைப் பார்த்தால் வெட்கக்கேடாகவும், அவமானமாகவும் இருப்பதாக விமர்சித்துள்ளார். அவர்களின் ஆதரவு இருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்த போரில் இஸ்ரேல் வெற்றிபெறுவது உறுதி என தெரிவித்த நெதன்யாகு, வெற்றிபெறும் வரை இந்த போர் தொடரும் என்றும் தெரிவித்தார்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பிரான்ஸ் அதிபர் மேக்ரான்
தலைப்புச் செய்திகள்| ஜானி மாஸ்டருக்கான தேசிய விருது ரத்து முதல் பாஜக MLA காலில் விழுந்த அமைச்சர் வரை

பேட்டி ஒன்றில் பேசிய பிரான்ஸ் அதிபர் மேக்ரான், காசா போரை முடிவுக்கு கொண்டுவர அரசியல் ரீதியாக தீர்வு காணப்படவேண்டும் என்றும், அதற்கு இஸ்ரேலுக்கான ராணுவ தளவாட ஏற்றுமதியை நிறுத்தவேண்டும் என பேசி இருந்தார். பிரான்ஸ் அதிபரின் பேச்சு, அந்நாட்டு அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை காட்டும் வகையில் அமைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பிரான்ஸ் அதிபர் மேக்ரான்
அக். 31-தான் கடைசி நாள்.. தோனியின் முடிவு என்ன? சிஎஸ்கே அதிகாரிகளை சந்திக்கும் MSD! விவரம்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com