இஸ்ரேலிய பிரதமர் நெதன்யா
இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஃபேஸ்புக்

'தாங்க முடியாத துன்பம்' - இஸ்ரேலிய பிரதமர் வேதனை

ஹமாஸ் அமைப்பினரால் பிடித்துச் செல்லப்பட்ட மூன்று இஸ்ரேலிய பணயக் கைதிகளை, தவறுதலாக இஸ்ரேலிய ராணுவமே கொன்றது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Published on

வடக்கு காசாவிலுள்ள ஷேஜய்யா பகுதியில் நடந்த இத்தாக்குதலில் இஸ்ரேலிய பணயக் கைதிகள் மூவர் உயிரிழந்தனர். அவர்களை 'அச்சுறுத்தல்' என தவறுதலாக நினைத்ததால் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி நடந்த தாக்குதலுக்கு பிறகு ஹமாஸ் அமைப்பு 100-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை பணயக் கைதிகளாக வைத்துள்ள நிலையில் அவர்களில் மூன்று பேரை தாய்நாட்டு ராணுவமே கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் வசம் எஞ்சியிருக்கும் கைதிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கைகோரி இஸ்ரேலிய மக்கள் கோஷங்கள் எழுப்பினர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ, இதனை 'தாங்க முடியாத துன்பம்' எனக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவும் இந்த சம்பவத்தை கண்டித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com