காஸாவில் நுழைந்த இஸ்ரேல் பீரங்கிகள்; ஆரம்பமாகிறதா தரைவழித் தாக்குதல்?

காசாவில் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் பீரங்கிகள் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. இது தரைவழித்தாக்குதலுக்கான முன்னோட்டமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

காசா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை மட்டுமே நடத்தி வருகிறது. தரைவழித்தாக்குதல் தொடங்கும் என ஆரம்பத்தில் கூறப்பட்டாலும் அது தொடர்ந்து தாமதிக்கப்பட்டு வந்தது. அமெரிக்காவின் அறிவுறுத்தலின்பேரில்தான் தரைவழித்தாக்குதல் தாமதமாவதாக கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்று இரவில் காசாவின் வடக்குப்பகுதியில் நுழைந்த இஸ்ரேல் பீரங்கிகள் சில குறிப்பிட்ட இலக்குகளை குறிவைத்து தாக்கின. ஹமாஸ் முகாம்கள், ஏவுகணை தடுப்பு அமைப்புகளை குறிவைத்து அழித்ததாகவும் போர்க்களத்தில் தங்கள் அடுத்த கட்ட நகர்விற்கான முன்னோட்டமே இத்தாக்குதல் என்றும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. காசாவிற்குள் இஸ்ரேல் பீரங்கிகள் நுழைந்தது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே காசாவில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மருத்துவசேவைகள் நிறுத்தப்பட்டுவிட்டன. மிகமிக ஆபத்தான நிலையில் உள்ளோருக்கு மட்டுமே சிகிச்சைகள் தரப்படுகின்றன.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com