\
Israel seeks Saudi nod to join Yemen campaign against Houthis
israel pmreuters

’உங்க உதவியே வேண்டாம்..’ இஸ்ரேல் போடும் மாஸ்டர் பிளான்.. ஒதுங்கி ஓடும் சவூதி!

ஒரு சுதந்திர பாலஸ்தீன அரசை நிறுவுவதில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டால் மட்டுமே இஸ்ரேலுடனான உறவு இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று சவூதி அரேபியா தொடர்ந்து கூறிவருகிறது.
Published on: 
Summary

ஏமனின் ஹவுதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் சேர அனுமதி கோரி, இஸ்ரேல் அமெரிக்காவின் மத்தியஸ்தம் மூலம் சவூதி அரேபியாவை அணுகியுள்ளது. ஆனால், இந்த விஷயத்தில் சவூதி அரேபியா எச்சரிக்கையாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

2022-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு மத்தியஸ்தம் செய்ததன் பேரில் சவூதி அரேபியாவின் ஆதரவு பெற்ற ஏமன் அரசாங்கப் படைகளுக்கும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஆனால், அந்த ஒப்பந்தம் நிராகதியான நிலையில், தற்போது இருதரப்புக்கும் இடையே தாக்குதல் அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே ஹவுதியின் தாக்குதலால், சவூதியின் எண்ணெய் வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அந்நாட்டின் விமான நிலையங்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதேநேரத்தில், மெக்கா ஒப்பந்தத்தின்படி, துருக்கியும் பாகிஸ்தானும் சவூதிக்கு ஆதரவாகக் களமிறங்கி உள்ளன. எனினும், ஹவுதி அமைப்பினரின் கையே நாளுக்கு நாள் ஓங்கி வருவதாகக் கூறப்படுகிறது.

israel pm
israel pmreuters

இந்த நிலையில், ஏமனின் ஹவுதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் சேர அனுமதி கோரி, இஸ்ரேல் அமெரிக்காவின் மத்தியஸ்தம் மூலம் சவூதி அரேபியாவை அணுகியுள்ளது. ஆனால், இந்த விஷயத்தில் சவூதி அரேபியா எச்சரிக்கையாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

காஸா, மேற்குக் கரை மற்றும் பிற இடங்களில் இஸ்ரேலியப் பாதுகாப்புப் படைகள் (IDF) இராணுவ நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ள நிலையிலும் இஸ்ரேல் சவூதிக்கு உதவ தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவின் மத்தியஸ்தத்தின் மூலம் முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படும் இந்த முன்மொழிவு, இஸ்ரேலை இன்னும் ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்காத சவூதி அரேபியாவுடனான உறவுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. எனினும், இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், இஸ்ரேலுடனான ஒத்துழைப்பு சவூதி குடிமக்களிடையே எதிர்மறையான எதிர்வினையைத் தூண்டக்கூடும் என்று அஞ்சுவதால், அவரது உதவையை அனுமதிக்கத் தயக்கம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

saudi arabia
saudi arabiaReuters

மேலும், இஸ்ரேல் இந்த உதவியின் மூலம் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தி, இறுதியில் சவூதியுடன் ஒரு இராஜதந்திர முன்னேற்றத்தைப் பெற உதவும் என்று இஸ்ரேல் நம்புகிறது. இதன் காரணமாகவே, சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் எச்சரிக்கையாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு சுதந்திர பாலஸ்தீன அரசை நிறுவுவதில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டால் மட்டுமே இஸ்ரேலுடனான உறவு இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று சவூதி அரேபியா தொடர்ந்து கூறிவருகிறது. ஆனால் இதற்கு இஸ்ரேல் எதிர்ப்பு தெரிவிப்பதால், அது பெரும் தடையாகவே நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com