2000ஐ தாண்டிய உயிரிழப்பு.. ஹமாஸ் அமைப்பின் நிதியமைச்சர் பலி.. பெரும் இழப்பை சந்திக்கும் பாலஸ்தீனம்

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இஸ்ரேலிய நகரங்களில் ஊடுருவி ஹமாஸ் நடத்திய தாக்குதல்களுக்கு பழி தீர்க்கப்படும் என்று இஸ்ரேல் கூறியுள்ளது
இஸ்ரேல் - ஹமாஸ் போர்
இஸ்ரேல் - ஹமாஸ் போர்புதிய தலைமுறை

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இஸ்ரேலிய நகரங்களில் ஊடுருவி ஹமாஸ் நடத்திய தாக்குதல்களுக்கு பழி தீர்க்கப்படும் என்று இஸ்ரேல் கூறியுள்ளது.

ஏராளமான இஸ்ரேலியர்கள் காசாவில் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேலிய தாக்குதலில் காசா பகுதியில் 900 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், காசாவின் அனைத்து மாவட்டங்களும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது. வானுயர எழும் தீப்பிழம்புகளும், புகை மூட்டமும் இஸ்ரேலின் கோரத்தாக்குதலை காட்டுகின்றன.

இஸ்ரேல் - ஹமாஸ் போர்
இஸ்ரேல் - ஹமாஸ் போர்முகநூல்

பதுங்கிக்கொள்ளவென்று எந்த இடமும் இல்லாத நிலையில், ஆறு பத்திரிகையாளர்களும் காசாவில் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் தரப்பில் இருந்து இதுவரை எந்த முழுமையான எண்ணிக்கையும் உறுதிபடுத்தப்படாத நிலையில், ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,200 இஸ்ரேலியர்கள்  கொல்லப்பட்டுள்ளதா கவும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் இஸ்ரேல்
ஊடகங்கள்  தெரிவிக்கின்றன.

ஹமாஸ் அமைப்பின் நிதியமைச்சர் ஜவாத் அபு ஷமாலாவும் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்ததாக அந்நாட்டு ராணுவம்
தெரிவித்துள்ளது. இவர், ஹமாஸ் அமைப்புக்காக நிதி திரட்டியவர் என்று கூறப்படுகிறது. இதற்கு ஹமாஸ் அமைப்பும் பதிலடியாக தாக்குதலை தீவிரப்படுத்தும் என்பதால் அங்கு அமைதி நிலவ உலக நாடுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க சர்வதேச அளவில்
கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com