உலக நாடுகள் கொரோனாவிலிருந்து தப்பிக்க முகக்கவசத்தை கட்டாயப்படுத்தி வரும் நிலையில் இஸ்ரேல் நாடு அதற்கு எதிர்மாறாக முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என அறிவித்துள்ளது.
பொது இடங்களிலும் பள்ளிகளிலும் முகக் கவசம் அணியத் தேவையில்லை என இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற விதி ஓராண்டுக்கு மேலாக இஸ்ரேலில் அமலில் இருந்த நிலையில் அது இப்போது தளர்த்தப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் உள்ள 93 லட்சம் மக்களில் 53 சதவிகிதம் மக்களுக்கு இரு தவணை தடுப்பூசி போட்டு இரு வாரங்கள் ஆகிவிட்ட நிலையில் இத்தளர்வை இஸ்ரேல் அறிவித்துள்ளது. எனினும் மூடப்பட்ட அறைகளிலும் அதிக கூட்டம் கூடும் இடங்களில் மட்டும் முகக்கவசம் அணிவது தொடர்ந்து கட்டாயம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.