தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்pt web
உலகம்
தெற்கு பெய்ரூட்டில் தாக்குதலை தீவிரப்படுத்தும் இஸ்ரேல்.. லெபனானில் பதற்றம்!
லெபனான் தெற்கு பெய்ரூட் பகுதிகளில் இஸ்ரேல் படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன.
தெற்கு பெய்ரூட் புறநகர் பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்டு வரும் வான்வழித் தாக்குதலால் ஏராளமான கட்டடங்கள், குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் தன்னார்வலர்கள், பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே தஹியே நகரில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் நிலைகள் மீது தாக்குதல் நடத்திய வீடியோவை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. கடந்த இருநாட்களில் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு சொந்தமான கட்டடங்கள், குடியிருப்புகள் மீது இஸ்ரேல் 9 முறை தாக்குதலை நடத்தியுள்ளது.
“திருமணத்தை வியாபாரமாக செய்வதென்பதே புதிது; அதிலும் அதற்கு பணம் கேட்பது..” - இயக்குநர் ராசி அழகப்பன்
இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 16 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளதாகவும் லெபனான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.