இஸ்ரேல் - பாலஸ்தீனம்: ஹமாஸ் உடன் கைகோர்த்த ஹிஸ்புல்லா அமைப்பு.. இரண்டாவது நாளாக தொடர்ந்த தாக்குதல்

ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது லெபனானின் ஹெஸ்புல்லா அமைப்பினரும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
இஸ்ரேல் பாலஸ்தீனம் போர்
இஸ்ரேல் பாலஸ்தீனம் போர்pt web

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் ஆயுதக் குழுவினர் நேற்று முன்தினம் காலை இஸ்ரேல் மீது தாக்குதலைத் தொடங்கினர். ‘ஆபரேஷன் அல்-அக்‌ஷா பிளட்’ என்ற பெயரில் தாக்குதலைத் தொடங்கிய ஹமாஸ் ஆயுதக் குழுவினர் 20 நிமிடங்களில் சுமார் 5000 ராக்கெட் குண்டுகளை வீசியது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலுக்குள் ஊடுருவினர். சிறிய ரக விமானங்கள் கடல் எனப் பல வழிகளில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் ஊடுருவினர்.

ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் தாக்குதலுக்கு பதில் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது. சுமார் 17 ஹமாஸ் முகாம்களில் இஸ்ரேல் ராணுவத்தினர் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். முதல் நாளில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் காசா எல்லையில் 198 பேர் உயிரிழந்ததாகவும், ஹமாஸ் ஆயுதப்படையினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் 70 பேர் உயிரிழந்தாகவும் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பிலும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இஸ்ரேல் - ஹமாஸ் இரு தரப்பினருக்கும் இடையேயான சண்டை இரண்டாவது நாளானா நேற்றும் நீடித்தது. இதில் இதுவரை இல்லாத அளவில் கடுமையான உயிர்சேதங்கள் ஏற்பட்டது. இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் எதிர்பாராமல் நடத்திய ஊடுருவல் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் காரணமாக நேற்றுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் படையினர் பதிலடி தாக்குதலை தீவிரப்படுத்தினர்.

ஹமாஸ் ஆயுதக் குழுவினரின் ஆக்கிரமிப்பில் இன்னும் 8 பகுதிகள் இருப்பதாகவும் அனைத்து பகுதிகளும் முழு கட்டுப்பாட்டில் வரும் வரை ஹமாஸ்க்கு எதிரான போர் தொடரும் என்றும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. 100க்கும் அதிகமான ஹமாஸ் குழுவினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் படையினர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீதான தாக்குதலை கருப்பு தினமாக அறிவித்த அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு, இஸ்ரேல் படையின் முழு ஆற்றலும் ஹமாஸின் ஆற்றலை அழிக்க பயன்படுத்தப்படும் என கூறினார்.

காஸா பகுதியில் இருப்போரை உடனடியாக வெளியேறும்படி அவர் அறிவுறுத்தியுள்ளார். படையினர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீதான தாக்குதலை கருப்பு தினமாக அறிவித்த அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு, இஸ்ரேல் படையின் முழு ஆற்றலும் ஹமாஸின் ஆற்றலை அழிக்க பயன்படுத்தப்படும் என கூறினார். காஸா பகுதியில் இருப்போரை உடனடியாக வெளியேறும்படி அவர் அறிவுறுத்தியுள்ளார்.

காசாவில் வங்கிகளை குறிவைத்தும் ஹமாஸ் உளவுப்பிரிவு தலைவரின் குடியிருப்பு, ஆயுதக் கிடங்குகளை குறிவைத்தும் ஏவுகணைத் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. காசாவில் 426 இடங்களை குறிவைத்து இஸ்ரேல் நாட்டு போர் விமானங்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. காஸா எல்லையருக்கே உள்ள இஸ்ரேலிய மக்கள் அனைவரையும் 24 மணி நேரத்திற்குள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த இஸ்ரேல் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது லெபனானின் ஹெஸ்புல்லா அமைப்பினரும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். ஹமாஸ் அமைப்புக்கு தங்களது ஆதரவை தெரிவிக்கும் வகையில் எல்லைப்பகுதியில் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com