israel and hamas warpt web
உலகம்
ஹமாஸ் மீதான தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 39,258 ஆக உயர்வு
இஸ்ரேல் - ஹமாஸ் படைகளுக்கு இடையே நடைபெற்று வரும் சண்டையில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 258 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உட்பட 41 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 103 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீன அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 90 ஆயிரத்து 589க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குதலை இஸ்ரேல் படைகள் தீவிரப்படுத்தி வருகின்றன.
Israel warpt desk
கடந்த ஆண்டு அக்டோபர் முதல், இஸ்ரேல் - ஹமாஸ் படைகளுக்கு இடையிலான சண்டை நடைபெற்று வரும் நிலையில், இஸ்ரேல் தரப்பில் ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 250க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பினரால் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.