”அம்மா வேணும்..” போர்க்களத்தில் தவிக்கும் குழந்தைகள்.. மனதை ரணமாக்கும் வீடியோ

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான மோதலில் குழந்தைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளின் நிலை சர்வதேச சமூகத்தை கவலையுறச் செய்துள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர்
இஸ்ரேல்-ஹமாஸ் போர்புதிய தலைமுறை

இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் 6-வது நாளாக நீடிக்கிறது. ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தி, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசித் தாக்கினர். அதன்பின்னர் இஸ்ரேல் அதிகாரபூர்வமாக போர் பிரகடனம் செய்து பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஹமாஸ் அமைப்பினர் புகுந்து தாக்குதல் நடத்திய எல்லையோரப் பகுதிகளை மீட்டு தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், காசா எல்லையை ஒட்டியுள்ள இஸ்ரேலிய கிராமமான கபார் அசாவில் 7ஆம் தேதி நடந்த தாக்குதலின்போது, சுமார் 40 குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

தாக்குதலில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் காயங்களுடன் காட்சியளிக்கும் காணொளிகளும், புகைப்படங்களும் இணையத்தில் பரவி வருகின்றன. போரில் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள சூழலில், குழந்தைகள் பலரும் தங்களது பெற்றோர்களை இழந்து தவித்து வருகின்றனர்.

குழந்தைகள் படுகாயங்களுடன் சாலைகளில் தஞ்சமடைந்துள்ள காட்சிகள் வெளியாகியுள்ளன. தாக்குதலில் இருந்து மீளமுடியாத குழந்தைகள் பலரும் மிகுந்த அச்சத்துடன் நடுங்கியபடி பேசியது காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. அவர்களுக்கு பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள், உணவு, தண்ணீர் கொடுத்து உதவி வருகின்றனர்.

இதையும் படிக்க; ’நம் இருவருக்கும் பிடித்தது 6 தான்’ - கெய்லுக்கு நன்றி தெரிவித்து ரோகித் சர்மா பதிவு!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com