\
trump & Netanyahu
trump & Netanyahureuters

இஸ்ரேலுக்கு அமெரிக்கா கொடுத்த ஷாக்.. ராணுவ உதவி நிறுத்தம்?

அமெரிக்காவின் ராணுவ உதவி நிறுத்தம்: இஸ்ரேல் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சி!
Published on: 
Summary

அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆண்டுதோறும் வழங்கும் 3.8 பில்லியன் டாலர் ராணுவ உதவியை நிறுத்தப்போவதாக டொனால்டு ட்ரம்ப் அறிவித்தது, இரு நாடுகளின் உறவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தியாளர் - M.மீரா

அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. இஸ்ரேலுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதியுதவியை இந்த ஆண்டின் இறுதிக்குள் நிறுத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு இஸ்ரேல் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

US Buys Russian Diesel but Threatens India with Tariffs
TRUMPANI

அமெரிக்காவின் ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பேசிய ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் சில மாதங்களுக்கு முன்பே இதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டதாகக் கூறியுள்ளார். மேலும், ஆண்டுக்கு சுமார் 4 பில்லியன் டாலர் நிதியுதவியை நிறுத்துவது குறித்து இருவரும் முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நிதி உதவி இனி இஸ்ரேலுக்குத் தேவையில்லை என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஆனால், ட்ரம்ப் அறிவித்துள்ள இந்த முடிவில் சில குழப்பங்கள் நீடிக்கின்றன. அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான தற்போதைய ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேலுக்கு ஆண்டுக்கு சுமார் 3.8 பில்லியன் டாலர் ராணுவ உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஒப்பந்தம் 2028ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும்.

எனவே, தற்போதைய ராணுவ உதவியை நிறுத்தப்போகிறாரா அல்லது வேறு ஏதேனும் நிதியுதவியை நிறுத்தப்போகிறாரா என்பது இன்னும் தெளிவாகவில்லை. 2028ஆம் ஆண்டுக்குப் பிறகு இஸ்ரேலுக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்து இரு நாடுகளும் ஏற்கெனவே ஆலோசித்து வருகின்றன.

Eisenkot
Eisenkotreuters

இதற்கிடையே, அமெரிக்காவின் நிதியுதவி நிறுத்தப்படும் என்ற அறிவிப்பு இஸ்ரேலுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகப் பேசிய இஸ்ரேல் எதிர்க்கட்சித் தலைவர், அமெரிக்காவின் இந்த அறிவிப்பு தங்களுக்கு எதிர்பாராத அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடனான உறவில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் இஸ்ரேலின் பாதுகாப்பு மற்றும் ராணுவத் திட்டங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். அமெரிக்காவுடனான உறவைச் சரிசெய்யவும், நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்களைக் கொண்டுவரவும் புதிய தலைமை தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

trump & Netanyahu
லாஸ் ஏஞ்சல்ஸ் மேயரான இந்திய வம்சாவளி பெண்! யார் இந்த நித்யா ராமன்?