உலகம்
“3 மணி நேரம் மட்டும்தான்.. தெற்கு பகுதிக்கு செல்லுங்கள்” - காஸா மக்களுக்கு அவகாசம் கொடுத்த இஸ்ரேல்
இஸ்ரேல் படைகளின் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், காசாவின் வடக்கு பகுதியில் உள்ள மக்கள் தெற்கு பகுதிக்கு செல்ல மூன்று மணி நேரம் இஸ்ரேல் அவகாசம் வழங்கியுள்ளது.
மக்கள் கடந்துசெல்ல ஏதுவாக பைட் ஹலோன் - கான் யூனிஸ் வழித்தடத்தில் 3 மணி நேரத்துக்கு எவ்வித தாக்குதலும் நடத்தப்படாது எனவும் கூறியுள்ளது.
இதனையடுத்து காசாவின் வடக்கு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனர். அதேபோல் எகிப்து எல்லை வழியாக செல்லவும் ஆயிரக்கணக்கான மக்கள் காத்துநிற்கின்றனர். எனினும் காசாவில் வசிக்கும் 11 லட்சம் மக்களில் ஒரு லட்சம் பேர் கூட இதுவரை வெளியேறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலஸ்தீன மக்களை வெளியேற விடாமல் ஹமாஸ் அமைப்பினர் தடுத்து நிறுத்துவதாக இஸ்ரேல் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதனிடையே இஸ்ரேல் படைகளுக்கு உதவும் வகையில் ஆயுதங்களுடன் 2 ஆவது விமானத்தை அமெரிக்கா அனுப்பிவைத்துள்ளது. இது மேலும் போர் தீவிரமாக காரணமாக அமையும் என்று பல்வேறு நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன.