ஹமாஸ் படையினர் கட்டுப்பாட்டில் இருக்கும் காஸா பகுதி மீது இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. மருத்துவமனை கட்டடங்கள், குடியிருப்பு பகுதிகள் என இஸ்ரேல் போர் விமானங்கள் இடைவிடாமல் குண்டுகளை வீசி வருகின்றன. காஸா நகரமே சிதைந்து வரும் சூழலில், தரைமட்டமாகி கிடக்கும் கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் இரவு, பகல் பாராமல் நடந்துவருகிறது.
காஸாவில் உள்ள அகதிகள் முகாம்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் குண்டுமழை பொழிந்தது. இதில், ஏராளமானோர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், மக்கள் தஞ்சமடைந்த கிரேக்க ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தின் மீதும் இஸ்ரேல்ர hணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.இ ந்த தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் படையினர் மற்றும் பாலஸ்தீன உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஃபா நகரில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவின் முதல் பெண் தலைவரான ஜிமலா அப்துல்லா தாஹாஅல் சாண்டி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. மறுபுறம் தரைவழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் தயாராகி வரும் சூழலில் எல்லையில் அதிகளவில் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. நள்ளிரவு காஸா மற்றும் இஸ்ரேலிய நகரங்களில் எச்சரிக்கை அலாரங்கள் ஒலித்த வண்ணம் உள்ளன.
காஸாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் நிரம்பி வழியும் நிலையில், சிகிச்சை அளிக்கத் தேவையான வசதிகள் இல்லாமல் பலர் திண்டாடி வருகின்றனர். அதே சமயம் உணவு மற்றும் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், காஸா நகர மக்கள் செய்வது அறியாது திகைத்துள்ளனர்.