காஸா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்
காஸா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்pt web

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்.. உயிரிழப்புகளின் எண்ணிக்கை 413 ஆக உயர்வு

காசா போர்நிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 413ஆக அதிகரித்துள்ளது.
Published on

இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினர் ஏற்றுக் கொண்ட முதற்கட்ட போர்நிறுத்தம் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட போர்நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இந்தசூழலில் காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது. காசா முனையில் இஸ்ரேல் நடத்திய அதிரடி வான்வழி தாக்குதலில் இதுவரை 413 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகிவுள்ளன. பலர் படுகாயமடைந்துள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடுமென அஞ்சப்படுகிறது.

கட்டட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதால் மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில், இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கிவிருப்பதால் காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் வெளியேறி வருகின்றனர். காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com