israel attack on lebanon react on iran
lebanonreuters

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்.. மிரட்டல் விடுத்த ஈரான்!

லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியிருப்பது பேசுபொருளாகி உள்ளது.
Published on

லெபனான் நாட்டின் சைடன் துறைமுக் நகரில் உள்ள உணவகம் ஒன்றை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 8 பேர் உயிரிழந்ததுடன் 22 பேர் காயமடைந்தனர். இதற்கிடையே, லெபனானில் தாக்குதலை நிறுத்தாவிட்டால் இஸ்ரேலின் டெல்அவிவ் மீது குண்டு வீசுவோம் என ஈரான் எச்சரித்துள்ளது.

மத்திய கிழக்கில் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தின. ஒரு மாதத்திற்கும் மேல் நடைபெற்ற இந்த தாக்குதல், தற்போது பாகிஸ்தான் மத்தியஸ்தன் செய்ததன் விளைவாக, 2 வார காலத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நிறுத்தும்பட்சத்தில், ஈரான் 10 அம்ச கோரிக்கைகளை அமெரிக்காவிடம் வலியுறுத்தியுள்ளது. அதில், லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. இந்த நிலையில் லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியிருப்பது பேசுபொருளாகி உள்ளது. லெபனான் நாட்டின் சைடன் துறைமுக் நகரில் உள்ள உணவகம் ஒன்றை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 8 பேர் உயிரிழந்ததுடன் 22 பேர் காயமடைந்தனர். இதற்கிடையே, லெபனானில் தாக்குதலை நிறுத்தாவிட்டால் இஸ்ரேலின் டெல்அவிவ் மீது குண்டு வீசுவோம் என ஈரான் எச்சரித்துள்ளது.

reuters

அமெரிக்கா அறிவித்த இரு வார போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப்பின் இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்ந்தால் விமானம் மற்றும் ஏவுகணை பிரிவுகள் டெல்அவிவை குறிவைத்து தாக்கும் என ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது. இதற்கு மத்தியில், லெபனானில் நடைபெறும் நடவடிக்கைகளுக்கு இந்த போர்நிறுத்தம் பொருந்தாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். மறுபுறம், லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதால், அது ஈரான் போர் நிறுத்தத்திலும் விளைவுகளை ஏற்படுத்தலாம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com