காஸாவில் உள்ள இரண்டாவது பெரிய மருத்துவமனைக்கு குறி; வெளிப்படையாக அறிவித்த இஸ்ரேல்!

காஸாவில் உள்ள அல்-குவாத் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்போவதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகள் மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்றுமாறும் எச்ச்ரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேல் காஸா இடையே 15 ஆவது நாளாக போர் நடந்து வருகிறது. இஸ்ரேலின் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகிவரும் காஸாவில் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. மருந்துகள் இல்லாமலும், ஜெனரேட்டர்களை இயக்க எரிபொருள் இல்லாமல் மருத்துவமனைகள் தவித்துவருகின்றன. மொபைல் போன் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சைகளை செய்யும் மருத்துவர்கள், காயம்பட்டவர்களுக்கு வினிகரை கொண்டு சிகிச்சை அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வியாழக்கிழமை இரவு கிரேக்க பழமைவாத தேவாலயம் ஒன்றின்மீது நடத்தப்பட்ட தாக்குதலிலும் ஏராளமானோர் காயம் அடைந்தனர்.

இந்நிலையில் காஸாவில் உள்ள இரண்டாவது பெரிய மருத்துவமனையான அல்-குவாத் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்போவதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. எனவே மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகள் மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்றுமாறும் எச்ச்ரிக்கை விடுத்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com