Israel கையில் 1+ லட்சம் ராணுவ வீரர்கள்.. Hamas வெறும் 40 ஆயிரம் வீரர்கள்.. ஆனாலும்?

போர்க்களத்தில் முட்டிக்கொண்டிருக்கும் இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் வசமுள்ள ஆயுதங்கள், தளவாடங்கள் என்னென்ன எனபது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இஸ்ரேல் - ஹமாஸ் போர்
இஸ்ரேல் - ஹமாஸ் போர்புதிய தலைமுறை

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் 7வது நாளாக நீடிக்கிறது. ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தி, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசித் தாக்கினர். அதன்பின்னர் இஸ்ரேல் அதிகாரபூர்வமாக போர் பிரகடனம் செய்து பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பலர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்து உள்ளனர்.

இஸ்ரேல் ஹமாஸ் போர்
இஸ்ரேல் ஹமாஸ் போர்pt web

இந்த நிலையில், போர்க்களத்தில் முட்டிக்கொண்டிருக்கும் இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் வசமுள்ள ஆயுதங்கள், தளவாடங்கள் என்னென்ன எனபது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிக்க: சைவ உணவிற்குப் பதிலாக அசைவ உணவு.. டெலிவரி செய்த Zomato, McDonald-க்கு ரூ.1 லட்சம் அபராதம்!

முறையான அமைப்பை கொண்ட இஸ்ரேலின் ராணுவத்தில் ஒரு லட்சத்து 69 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் உள்ளனர். அது தவிர தேவைப்பட்டால் ராணுவ சேவையாற்ற வல்லவர்களாக சுமார் நான்கு லட்சத்து 65 ஆயிரம் பேர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஹமாஸ் ஆயுதக் குழுவில் சுமார் 40ஆயிரம் பேர் வரை இருக்கக்கூடும் என கணிக்கப்படுகிறது. ஆயுத பலம் என பார்த்தால் இஸ்ரேல் வசம் 2,200க்கும் மேற்பட்ட ராணுவ பீரங்கிகளும் 530 கனரக துப்பாக்கிகளும், 330க்கும் மேற்பட்ட நவீன போர் விமானங்களும் உள்ளன. மறுபக்கம் ஹமாஸ் குழுவினர் தங்களது தாக்குதல்களுக்கு ஏவுகணைகளையே அதிகம் நம்பியுள்ளனர்.

ஈரான் நாட்டின் M-75 ஃப்ட்ச் ஏவுகணைகள், 48 கிலோமீட்டர் தூரம் தாக்கி அழிக்கும் கிரேட் ராக்கெட்டுகள் என ஆறாயிரத்திற்கும் மேல் நவீன ராக்கெட்டுகள் உள்ளன. 17 கிலோமீட்டர் தொலைவுக்கு தாக்குதல் நடத்தவல்ல ஒசான் ஏவுகணைகள் உட்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய ரக ஏவுகணைகள் உள்ளன. ஹமாஸின் வசம் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நவீன துப்பாக்கிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இஸ்ரேல் 49 விமானம்தாங்கி கப்பல்களை வைத்திருக்கும் நிலையில் ஹமாஸ் குழுவினர் சிறு படகுகளை மட்டுமே கொண்டுள்ளனர். இஸ்ரேலின் ஆண்டு ராணுவ பட்ஜெட் ஆண்டுக்கு 2.1 லட்சம் கோடி டாலர்களாக உள்ள நிலையில் ஹமாஸ் குழுவினரின் பட்ஜெட் வெறும் 832 கோடி டாலர்கள் என கணக்கிடப்ப்டுகிறது.

இதையும் படிக்க: இஸ்ரேல் - ஹமாஸ் போர்: பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஈராக், ஜோர்டான் மக்கள்.. எல்லையை கடக்க முயற்சி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com