ஹாமாஸ்
ஹாமாஸ் pt

போப் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த ஹமாஸ்!

ஹாமாஸ் அமைப்பு போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் பதிவிட்டுள்ளது.
Published on

கத்தோலிக்க கிறிஸ்வத மதத்தின் 266ஆவது போப்பாக இருந்த பிரான்சிஸ் என அறியப்பட்ட ஜோர்ஜ் மரியோ பெர்கோக்லியோ உடல்நலக் குறைவால் காலமானார். இதன்காரணமாக வாடிகன் நகரம் தற்போது தலைமை இல்லாமல் இருக்கிறது.

இந்த நிலையில், இறுதி சடங்குக்கு முந்தைய நாள் இரவு அவரின் சவப்பெட்டி மூடப்படும். மறைந்த போப் பிரான்சிஸின் முகம் வெள்ளை நிற பட்டுத் திரையால் மறைக்கப்பட்டு அவர் காலத்தில் உருவாக்கப்பட்ட நாணயங்கள் மற்றும் ரோஜிட்டோ என்ற ஆவணமும் சவப்பெட்டியில் வைக்கப்பட்டது. இவரது இறப்பிற்கு பல நாடுகளிலிருந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்தவகையில், ஹாமாஸ் அமைப்பும் தனது இரங்கலை பதிவிட்டுள்ளது. அதில், "மனிதாபிமான மற்றும் மத விழுமியங்களின் சேவையில் ஒரு வளமான பயணத்திற்குப் பிறகு மரணமடைந்துள்ள வாட்டிக்கனின் போப் பிரான்சிஸின் மறைவுக்கு, உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க திருச்சபைக்கும், அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் ஹமாஸ் தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறது.” என்று இரங்கல் தெரிவித்துள்ளது .

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com