5 வருடத்துக்குப் பிறகு வீடியோவில் தோன்றிய ஐஎஸ் தலைவர் அல்-பக்தாதி!

5 வருடத்துக்குப் பிறகு வீடியோவில் தோன்றிய ஐஎஸ் தலைவர் அல்-பக்தாதி!
5 வருடத்துக்குப் பிறகு வீடியோவில் தோன்றிய ஐஎஸ் தலைவர் அல்-பக்தாதி!

கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பக்தாதி, 5 வருடங்களுக்கு பிறகு வீடியோவில் தோன்றி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பக்தாதி. இந்த அமைப்புக்கு பல்வேறு நாடுகளில் இருந்து ஆட்கள் சேர்க்கப்பட்டனர். ஈராக் மற்றும் சிரியாவில் சில பகுதிகளை இந்த அமைப்பு கடந்த 2014 ஆம் ஆண்டு கைப்பற்றியது. அப்போது, இஸ்லாமிய தேசம் உருவாகிவிட்டதாக அல் பாக்தாதி பேசும் வீடியோ வெளியானது. அதன்பின் அவர் தலைமறைவானார். அவர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்கா மற்றும் கூட்டுப்படைகளின் தாக்குதலில் தங்கள் வசம் இருந்த பகுதிகளை ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு இழந்தது. இருந்தாலும் தலைமறைவாக இருந்து அந்த அமைப்பை சேர்ந்தவர்கள், தற்கொலைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் இலங்கையிலும் இந்த அமைப்பினர் தற்கொலை தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் 5 வருடங்களுக்குப் பிறகு, கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட அல்-பக்தாதி,  தோன்றி பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவருடன் 3 பேர் உள்ளனர். அவர்கள் முகம் மங்கலாக்கப்பட்டுள்ளது. 18 நிமிடம் ஓடும் இந்த வீடியோவில், எதற்காக இலங்கை குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். சிரியாவில் தங்கள் வசம் இருந்த பாகூஸ் நகரத்தை இழந்ததை அடுத்து, பழிவாங்குவதற்காக ஈஸ்டர் அன்று தேவாலயங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.  சர்வாதி காரத்தை ஒழிக்க, இதுதான் சரியான வழி என்றும் கூறியுள்ள அவர், தங்கள் அமைப்பினர் எங்கு கொல்லப்பட்டாலும், பழி வாங்குவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து மசூதியில் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக இலங்கை தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பாகூஸ் நகரத்தை இழந்ததற்காகவே தாக்குதல் நடத்தப்பட்டது என்று ஐஎஸ் தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com