பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உச்சம் தொடப்போகிறதா..? ஏன்..?

பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உச்சம் தொடப்போகிறதா..? ஏன்..?
பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உச்சம் தொடப்போகிறதா..? ஏன்..?

கச்சா எண்ணெய் உற்பத்தியை கணிசமாக குறைக்க ஓபெக் எனப்படும் எண்ணெய் வள நாடுகள் முடிவு செய்துள்ளன. இதனால் பெட்ரோல் டீசல் விலை விறுவிறுவென உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஆஸ்திரிய நாட்டு தலைநகர் வியன்னாவில் ஓபெக் (OPEC) எனப்படும் எண்ணெய் வள நாடுகளின் கூட்டம் நடைபெற்றது. இதில் தங்கள் எண்ணெய் உற்பத்தியை தினசரி 36 லட்சம் பீப்பாய் அளவுக்கு குறைக்க அனைத்து நாடுகளும் ஒப்புக்கொண்டன. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எண்ணெய் உற்பத்தியை குறைக்க கூடாது என அமெரிக்கா கொடுத்த கடும் நெருக்கடியையும் மீறி இம்முடிவை ஓபெக் நாடுகள் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஓபெக் நாடுகளின் அறிவிப்பால் கச்சா எண்ணெய் விலை 93 டாலராக அதிகரித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் 120 டாலர்களாக இருந்த கச்சா எண்ணெய் விலை கடந்த வாரம் 85 டாலராக குறைந்தது. ஓபெக் அமைப்பின் முடிவால் அது தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து வருவதாலும் அதிகளவில் விலை உயர்வு இருக்கலாம் என கருதப்படுகிறது

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/3ukRxEJ9X5E" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com