’எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!’ சமூக வலைதளத்தை ஆக்கிரமித்த போர்க்கால புரளி பதிவுகள்!

’எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!’ சமூக வலைதளத்தை ஆக்கிரமித்த போர்க்கால புரளி பதிவுகள்!
’எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!’ சமூக வலைதளத்தை ஆக்கிரமித்த போர்க்கால புரளி பதிவுகள்!

உலகில் வதந்திகளுக்கு பற்றாக்குறை என்பதே கிடையாது. அதுவும் சமூக வலைதளங்கள் மூலமாக பல்வேறு வதந்திகள் பரவி வருவதுண்டு. இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்துள்ள நிலையில் அப்படியான வதந்திகள் அதிக அளவில் பரவுவதாக சொல்லப்படுகிறது. அதுவும் அது போர் சார்ந்த புரளிகளாக உள்ளன. 

 அதனை பதிவு செய்யவே சிலர் நடித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை மேற்கத்திய நாடுகள் மிகைப்படுத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஆயிர கணக்கான மக்கள் உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறி செல்லும் புகைப்படத்தை தவிர்த்து சமூக வலைதளத்தில் உலா வரும் பெரும்பாலான படங்கள் போலியானவை என்றும். அது சித்தரிக்கப்பட்டவை என்றும் சிலர் நம்புகின்றனர். 

அதுவும் ரத்தம் சொட்ட சொட்ட நிற்கும் இளைஞன், பெண் என சமூக வலைதளங்களில் சில வீடியோ படங்கள் இந்த போரை சார்ந்து பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பிய நெட்டிசன்கள் அது போலியானவை என்றும் தெரிவித்துள்ளனர். 

விசாரித்ததில் அந்த வீடியோவுக்கும் இந்த போருக்கும் துளி அளவும் சம்மதம் ஏதும் இல்லை என தெரியவந்துள்ளது. மேலும் அந்த வீடியோ 2020 வாக்கில் டிவி சீரியலுக்காக எடுக்கப்பட்ட காட்சிகள் என்றும் தெரிகிறது. அதே போல உயிரிழந்தவர்களை மூட்டையில் கட்டி வைத்தது போல உள்ள பின்புலத்தில் பத்திரிகை நிரூபர் ஒருவர் செய்தியை தொகுத்து வழங்குகிறார். அப்போது அந்த மூட்டைகளில் ஒன்று தானாக நகர்கிறது. மேலும் அந்த மூட்டையை பிரித்துக் கொண்டு ஒருவர் வெளியேறும் காட்சியும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவை போருடன் தொடர்புபடுத்தி மேற்கத்திய நாடுகளின் திட்டம் இது என கேப்ஷன் கொடுத்து சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த வீடியோ கடந்த பிப்ரவரி மாதத்தில் காலநிலை மாற்றம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் எடுக்கப்பட்டது என்று தெரியவந்துள்ளது. 

அதே போல ரஷ்ய படைகள் உக்ரைனில் படையெடுப்பதற்கு முன்னதாகவே உக்ரைன் நாட்டை சேர்ந்த சாமானிய மக்கள் போருக்கு தயாராகும் வகையிலான வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் மர துப்பாக்கிகளை கொண்டு பயிற்சி மேற்கொள்கின்றனர் மக்கள். இந்த படங்கள் எல்லாம் போரை சார்ந்தது இல்லை என சொல்லி நெட்டிசன்கள் அதை வைரல் செய்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com