\
பிரிட்‌டனை அச்சுறுத்தும் ஒஃபிலியா புயல்: பேரிடரைச் சமாளிக்க ராணுவம் குவிப்பு

பிரிட்‌டனை அச்சுறுத்தும் ஒஃபிலியா புயல்: பேரிடரைச் சமாளிக்க ராணுவம் குவிப்பு

பிரிட்‌டனை அச்சுறுத்தும் ஒஃபிலியா புயல்: பேரிடரைச் சமாளிக்க ராணுவம் குவிப்பு
Published on

பிரிட்டனை நெருங்கி வரும் ஒஃபிலியா புயலால் பெரிய அளவில் சேதம் ஏற்படலாம் என்பதால், பேரிடரை சமாளிப்பதற்காக ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனை நெருங்கி வரும் ஒஃபிலியா புயலால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படலாம் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன் இதே போன்ற புயல்தான் பிரி‌ட்டனை சின்னாபின்னமாக்கியதாக கூறப்படுகிறது.

‌இதன் காரணமாக அயர்லாந்தில் உள்ள அனைத்து பள்ளி‌, கல்லூரிகளுக்கும் விடுமுறை அ‌ளிக்கப்பட்டுள்ளது. பேரிடரை சமாளிப்பதற்காக ராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது. தற்போது அட்லாண்டிக் கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள ஒஃபிலியா புயல் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும் என‌ எச்சரிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com