பிரபல இன்ஸ்டாகிராம் மாடல் சுட்டுக்கொலை

பிரபல இன்ஸ்டாகிராம் மாடல் சுட்டுக்கொலை
பிரபல இன்ஸ்டாகிராம் மாடல் சுட்டுக்கொலை

இன்ஸ்டாகிராம் மாடலும் சமூக வலைத்தளங்களில் பிரபலமானவருமான ஈராக்கைச் சேர்ந்த தாரா பரேஸ் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஈராக் நாட்டைச் சேர்ந்தவர் தாரா பரேஸ். 22 வயது. அந்நாட்டின் முன்னாள் அழகியான அவர் சமூக வலைத்தளங்களில் பிரபலமானவராக இருந்தார். இன்ஸ்டாகிராமில் பதிவிடும் அவரது ஸ்டைலான படங்கள் உலகம் முழுவதும் பிரபலம். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை மட்டும் சுமார் 3 மில்லியன் பேர், பின் தொடர்கிறார்கள். இதையடுத்து ஈராக்கின் மிகவும் பிரபலமான சமூக ஊடக நட்சத்திரமாக இவர் கடந்த புதன் கிழமைதான் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தார். அந்த மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருந்த அவர், பாக்தாத்தில் உள்ள காம்சாரா நகருக்கு வியாழக்கிழமை காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்களால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக ஈராக் அரசு தெரிவித்துள்ளது. பரேஸின் வாழ்க்கை மீது பொறாமைபட்டோ, அல்லது பழமைவாதி களாலோ அவர் கொல்லப் பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அவரின் மரணத்தை அடுத்து, சமூக வலைதளங்களில் கண்டனங்களையும் இரங்கலையும் பலர் பதிவு செய்து வருகின்றனர்.

ஒருவர், ‘மிகுந்த மன வேதனையாக இருக்கிறது. தாரா, சமூக வலைதளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவரின் இறப்பு வருத்தமளிக்கிறது. பட்டப்பகலில் அவர் கொல்லப்பட்டதை என்னால் நம்ப முடியவில்லை’ என்று பதிவிட்டுள்ளார். இன்னொருவர், ‘இந்த வியாழக்கிழமை தாரா. அடுத்த வியாழன் யாரோ?’ என்று கேள்வி கேட்டுள்ளார்.

இதற்கிடையே பரேஸின் உடலை மூன்று துப்பாக்கிக் குண்டுகள் துளைத்ததாக உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com