\
மொசூல் நகரை மீட்டது ஈராக்: வெற்றியை கொண்டாடும் வீரர்கள்

மொசூல் நகரை மீட்டது ஈராக்: வெற்றியை கொண்டாடும் வீரர்கள்

மொசூல் நகரை மீட்டது ஈராக்: வெற்றியை கொண்டாடும் வீரர்கள்
Published on

ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்த ஈராக்கில் உள்ள மொசூல் நகரை ராணுவம் கைப்பற்றியதையடுத்து, வீரர்கள்  உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். 

கடந்த 2014 ம் ஆண்டு ஈராக் ராணுவத்தை விரட்டியடித்த, ஐ.எஸ்.பயங்கரவாதிகள் மொசூல் நகரைக் கைப்பற்றிக் கொண்டனர். இதையடுத்து, ஈராக்கின் மொசூல் நகர் சுமார் 3 ஆண்டுகளாக ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. அந்நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியிருந்த பல்வேறு பகுதிகளை அமெரிக்கக் கூட்டுப் படை உதவியுடன் ஈராக் ராணுவம் மீட்டு வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிய ஈராக் படையினர், பெரும் பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. இந்நிலையில், அதிரடித் தாக்குதல் நடத்திய ஈராக் படையினர், ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்த மொசூல் நகர் முழுவதையும் கைப்பற்றியது. இந்த வெற்றியை பாதுகாப்புப் படையினர் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com