\
Iraq reopens old oil route as Hormuz crisis threatens Europe
iraq reuters

Hormuz நெருக்கடி.. Europe நாடுகளுக்கு மாற்று வழி.. பழைய Route-ஐ மீண்டும் திறந்த ஈராக்!

ஈரான் போரால் பாதிக்கப்பட்ட ஹார்முஸ் நீரிணை: ஈராக் புதிய எண்ணெய் ஏற்றுமதி வழியைத் தொடங்கியது.
Published on: 

செய்தியாளர் - M.மீரா

ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் தடங்கல்களைத் தொடர்ந்து, ஈராக் தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு மாற்று வழியைத் தேடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் இருந்த சிரியா வழியிலான தரைவழி எண்ணெய் போக்குவரத்தை ஈராக் மீண்டும் தொடங்கியுள்ளது.

ஈராக் தனது கச்சா எண்ணெயில் பெரும்பகுதியை பாரசீக வளைகுடா துறைமுகங்கள் வழியாகவே ஏற்றுமதி செய்து வந்தது. ஆனால், ஈரான் போரால் ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், மாற்று வழிகளில் எண்ணெயை அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

iraq
iraqreuters

இதற்காக, ஈராக்கின் தெற்குப் பகுதியில் உள்ள பாஸ்ரா எண்ணெய் வயல்களில் இருந்து சிரியாவின் பனியாஸ் (Baniyas) துறைமுகத்துக்கு லாரிகள் மூலம் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது. கத்தார் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் இந்தப் போக்குவரத்தை மேற்கொண்டு வருகிறது.

சிரியாவின் மத்திய தரைக்கடல் கடற்கரையில் உள்ள பானியாஸ் (Baniyas) துறைமுகத்திற்குச் சென்று, அங்கிருந்து கப்பல்கள் (Tankers) மூலம் சர்வதேச சந்தைகளான கிரீஸ், இத்தாலி, துருக்கி (Turkiye) மற்றும் பிற மத்திய தரைக்கடல் நாடுகளின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறது

ஈராக் அரசின் பாஸ்ரா எண்ணெய் நிறுவனம் கடந்த மாதம் முதல் இந்தப் போக்குவரத்து தொடங்கியுள்ளது. இதன்படி, தினமும் சுமார் 1.2 லட்சம் முதல் 1.5 லட்சம் பேரல் வரை கச்சா எண்ணெய் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. ஒரு லாரி ஈராக்கில் இருந்து சிரியா சென்று மீண்டும் திரும்புவதற்கு சுமார் 5 நாட்கள் ஆகின்றன என்று கூறப்படுகிறது.

Iraq reopens old oil route as Hormuz crisis threatens Europe
சுக்கு நூறாக நொறுக்கிய ஈரான்! USA-ன் கடற்படை சொத்து காலி!