\
Irans Secret Oil Trade US Sanctions Indian Couple
iran shipsreuters

ஈரானின் 'நிழல் கப்பற்படை' மோசடி.. சிக்கிய இந்தியத் தம்பதி.. அமெரிக்கா அதிரடி!

ஈரானிய கச்சா எண்ணெய்யை ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கு போலியான பதிவுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கிய மோசடி குற்றச்சாட்டின் கீழ், இந்தியாவைச் சேர்ந்த தம்பதி மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
Published on: 

சர்வதேசப் பொருளாதாரத் தடைகளை மீறி ஈரான் தனது கச்சா எண்ணெய்யை உலக நாடுகளுக்கு விற்பனை செய்ய 'நிழல் கப்பற்படை எனப்படும் ஒரு ரகசிய வலையமைப்பைப் பயன்படுத்துகிறது. இந்த வலையமைப்பின் மிக முக்கியமான தந்திரமே 'போலிக் கொடிகள்' மற்றும் 'போலிப் பதிவுகள்' ஆகும். அந்த வகையில், ஈரானிய கச்சா எண்ணெய்யை ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கு பல்வேறு நாடுகளின் பெயரில் போலிக் கொடிகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி இந்தியாவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் மோசடியில் ஏற்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதன்படி, இதில் சண்டிகரைத் தளமாகக் கொண்டு செயல்படும் சுனில் குமார் சர்மா மற்றும் அவரது மனைவி ஜஸ்பிரீத் ப்ரீத்தி ஷாஹித் ஆகியோர் மோசடி செய்திருப்பதாக அமெரிக்க கருவூலத் துறையால் தெரிவிவிக்கப்பட்டுள்ளது.

iran ships
iran shipsreuters

இந்த மோசடி வலைப்பின்னல் 2014-ஆம் ஆண்டில் இருந்தே செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்கள் மீதும் அவர்களுடன் தொடர்புடைய பல நிறுவனங்கள் மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஈரானின் நிதி ஆதாரங்களை முடக்கும் நோக்கில் அமெரிக்க கருவூலத் துறை முன்னெடுத்துள்ள 'ஆபரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்' என்ற நடவடிக்கையின்கீழ் இந்தத் தடைகள் அறிவிக்கப்பட்டன. இந்தத் தடையின் மூலம் அமெரிக்க அதிகார வரம்பிற்குள் இருக்கும் இவர்களது சொத்துக்கள் முடக்கப்படுவதோடு, அமெரிக்க மக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இவர்களுடன் எவ்விதப் பரிவர்த்தனைகளும் மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது.