ஆசன வாய் வழியாக சிக்கிய வாட்டர் பாட்டில்.. ஈரானியரின் விபரீதமான விளையாட்டு.. என்ன ஆனது?

ஆசன வாய் வழியாக சிக்கிய வாட்டர் பாட்டில்.. ஈரானியரின் விபரீதமான விளையாட்டு.. என்ன ஆனது?
ஆசன வாய் வழியாக சிக்கிய வாட்டர் பாட்டில்.. ஈரானியரின் விபரீதமான விளையாட்டு.. என்ன ஆனது?

50 வயது நபரின் ஆசன வாய் வழியாக வாட்டர் பாட்டில் ஒன்று சிக்கியதை கண்டு மருத்துவர் அதிர்ச்சியடைந்திருக்கிறார். இந்த சம்பவம் ஈரான் நாட்டில் நடந்திருக்கிறது.

தனது 50 வயது கணவர் சில நாட்களாக எதுவும் சாப்பிட முடியாமல், மலம் கழிக்க முடியாமல் அவதிப்பட்டதை அடுத்து அவரை ஈரானில் உள்ள இமாம் கொமேனி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மனைவி அழைத்துச் சென்றிருக்கிறார்.

விஷயம் தெரிந்தால் சங்கடமாக இருக்கும் என்றும், மனைவிக்கு பயந்துக்கொண்டும் மருத்துவரிடம்கூட அந்த நபர் தன்னுடைய வயிற்றில் வாட்டர் பாட்டில் இருப்பதை தெரியப்படுத்தாமல் இருந்திருக்கிறார்.

இது தொடர்பாக Journal Clinical Case வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, 50 வயது கொண்ட அந்த நபர் 19 சென்டிமீட்டர் அளவு கொண்ட தண்ணீர் பாட்டிலின் மேல் பகுதியை இழுத்தால் வெளியே எடுத்துவிடலாம் என எண்ணி அதன் அடிப்பகுதியை தன்னுடைய ஆசன வாய் வழியாக உள்ளே நுழைத்திருக்கிறார்.

ALSO READ: 

ஆனால் எதிர்பாராத விதமாக பாட்டில் அவரது குடலில் சிக்கியிருக்கிறது. இதனை வெளியே சொல்லவும் முடியாமல், முறையாக சாப்பிடவும் முடியாமல் அவதியடைந்திருக்கிறார்.

அதன் பிறகுதான் மனைவி அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கும் முதலில் கூறாமல் இருந்த அவரின் செயல் CT ஸ்கேன் எடுத்த பிறகு அவரது குடலில் பாட்டில் இருந்தது கண்டறியப்பட்டிருக்கிறது.

ஆனால் எதற்காக பாட்டிலை உள்ளே செருகினார் என்பதை அந்த நபர் விளக்கியது குறித்து மருத்துவர்களும் வெளிப்படுத்தவில்லை. இருப்பினும் பாலியல் ரீதியான திருப்திக்காக இப்படி பொதுவாக சிலர் செய்வார்கள் எனக் கூறியிருக்கிறார்.

இதனையடுத்து கவனமாகவும், பொறுமையாகவும், அந்த நபரின் உடலில் சிக்கியிருந்த பாட்டிலை ஆசன வாய் வழியாகவே வெளியே எடுத்திருக்கிறார்கள். இதனால் அவருக்கு எந்த ரத்தப்போக்கு உள்ளிட்ட பாதிப்பும் ஏற்படவில்லை.

மூன்று நாட்களுக்கு பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதோடு, மனநல ஆரோக்கியத்திற்காக psychiatric மருத்துவரையும் அணுக அறிவுறுத்தியிருக்கிறார்கள். அதன்படியே ஒருமாதம் கழித்து அவர் பூரணமாக குணமடைந்துவிட்டார் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com