அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் எச்சரிக்கை

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் எச்சரிக்கை
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் எச்சரிக்கை

சர்வதேச நாடுகளுடனான அணுசக்தி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டால், யூரேனியம் செறிவூட்டும் பணியை எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானுடன் கடந்த 2015 ஆம் ஆண்டு மேற்கொண்ட சர்வதேச அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்வதாக அமெரிக்கா அறிவித்தது. மேலும், அந்நாட்டுடன் வர்த்தக உறவு வைத்துக் கொள்ளும் நிறுவனங்கள் மீது பல்வேறு தடைகளை விதிக்கப் போவதாகவும் அறிவித்தது.

எனினும் இந்த ஒப்பந்தத்தில் உள்ள பிற நாடுகள், ஈரானுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. மேலும் யூரேனியம் செறிவூட்டும் பணியை மீண்டும் தொடங்கக் கூடாது என வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், சர்வதேச அணுசக்தி ஒப்பந்தம் முழுமையாக ரத்து செய்யப்பட்டால், தங்களது அணுசக்தி திட்டங்களை எதிரி நாடுகளால் தடுத்து நிறுத்த முடியாது என ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார். எதிரிகளின் கெட்டக் கனவு எந்தச் சமயத்திலும் பலிக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com