\
Minab School
Minab SchoolReuters

ஈரான்/அமெரிக்காவின் வரலாற்றுப் பிழை... கொடூர தாக்குதலில் 123 குழந்தைகள் உயிரிழப்பின் பகீர் பின்னணி!

ஈரானில் அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்: 123 குழந்தைகள் உட்பட 150 பேர் உயிரிழப்பு!
Published on: 

செய்தியாளர் - M.மீரா

ஈரானுக்கு எதிராக அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் கூட்டு ராணுவ நடவடிக்கையைத் தொடங்கிய முதல் நாளான பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவின் இரண்டு 'டொமாஹாக்' ஏவுகணைகள் மினாப் நகரில் உள்ள ஆரம்பப் பள்ளியைத் தரைமட்டமாக்கின. இந்த கோர சம்பவத்தில் 123 பள்ளிச் சிறுமிகள் மற்றும் 14 ஆசிரியர்கள் உட்பட 150-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். 21-ஆம் நூற்றாண்டில் அமெரிக்க ராணுவம் செய்த மிக மோசமான தாக்குதலாக இது பார்க்கப்பட்டது. அதாவது இது தவறாக குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலாக சர்வதேச அளவில் பார்க்கப்படுகிறது.

Minab School Childrent's mass grave
Minab School Childrent's mass grave reuters

கடந்த பிப்ரவரி 28 அன்று ஆரம்பப் பள்ளி மீது அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் பின்னணியில் உள்ள தொழில்நுட்பக் குளறுபடிகள் தற்போது அம்பலமாகியுள்ளன.

இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகித்ததாக முன்னதாக வெளியான தகவல்கள் விவாதத்தை ஏற்படுத்தின. இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற என்டிடிவி உலக உச்சி மாநாட்டில் பேசிய முன்னாள் சிஐஏ தலைவர் டேவிட் பெட்ரேயஸ் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

ஈரானில் ஆரம்பப்பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த பெட்ரேயஸ், தாக்குதலுக்கான இலக்கைக் கண்டறிவதில் செயற்கை நுண்ணறிவு உதவியிருக்கலாம் என்றும், ஆனால் இறுதி முடிவை எடுத்தது மனிதர்தான் என்றும் தெரிவித்துள்ளார்.

minab school attack
minab school attack reuters

அமெரிக்காவின் புளூம்பெர்க் ஊடகம் நடத்திய விசாரணையில், ஈரான் மீதான தாக்குதலைத் திட்டமிடுவதற்காக அமெரிக்கா பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன், 'பாலந்தீர் மேவன் ஸ்மார்ட் சிஸ்டம்' (Palantir's Maven Smart System) என்ற அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது. இந்த இயந்திரம் வெறும் 24 மணி நேரத்திற்குள் 1,000-க்கும் மேற்பட்ட தாக்குதல் இலக்குகளைத் தானியங்கி முறையில் தயார் செய்து கொடுத்தது.

தாக்குதலுக்குள்ளான பள்ளி, 7 ஆண்டுகளுக்கு முன்பு ஈரானிய புரட்சிகர காவல்படையின் (IRGC) ராணுவ முகாமின் ஒரு பகுதியாக இருந்தது. 2019-லேயே அது பள்ளியாக மாற்றப்பட்டதை அமெரிக்க உளவுத்துறை அறிந்திருந்தாலும், முதன்மை ராணுவத் தரவுத்தளத்தில் (Targeting Database) அந்தப் பழைய தகவலை மாற்ற மனித அதிகாரிகள் தவறிவிட்டனர்.

பழைய தரவுகளின்படி அந்தப் பள்ளியை ராணுவ முகாம் என AI அடையாளம் காட்டியபோது, போரின் அவசரம் காரணமாக மனித அதிகாரிகள் அதை மறுபரிசீலனை செய்யாமல் ஏவுகணையை இயக்க இறுதி ஒப்புதல் அளித்தனர்.

Minab school Chilldren funeral
Minab school Chilldren funeralreuters

இதன்படி ஆரம்பப்பள்ளி மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலுக்கு AI கணினி மட்டுமே காரணமல்ல மனிதர்களின் அலட்சியமே முதன்மைக் காரணம் என்று தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் தவறு உறுதியான பிறகும் டிரம்ப் நிர்வாகம் இந்தத் தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்காதது அமெரிக்காவின் சர்வதேசப் பிம்பத்தைச் சிதைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை (UN) இக்கோரச் சம்பவத்தை ஒரு "போர்க் குற்றம்" என அறிவித்துக் கண்டனம் தெரிவித்துள்ளது.

Minab School
அமெரிக்காவின் நட்பு நாடுகளை லிஸ்ட் போட்டு தூக்கும் ஈரான்? அடுத்து கத்தார்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com