"அமெரிக்காவை வீழ்த்திய அனுபவத்தைப் பகிர்வோம்" - ஈரான் அமைச்சர் அழைப்பு!
பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியன் மூலம் மத்தியக் கிழக்கில் போர் மூண்டது. அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், உலகின் 20% சதவீத கச்சா எண்ணெய் வர்த்தகம் நடக்கும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியதுடன், வளைகுடா நாடுகளில் உள்ள ராணுவத் தளவாடங்கள் மீதும் தாக்குதல் நடத்தியது. இந்த சூழலில் தான், பாகிஸ்தானின் மத்தியஸ்தத்திற்குப் பிறகு, தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கிறது.
தொடர்ந்து, நிரந்தரப் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தையை பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தொடர்ந்து முன்னெடுத்து வரும் நிலையில், ஹார்முஸ் பகுதியில் உள்ள அமெரிக்காவின் முற்றுகையை நீக்கும் வரை பேச்சுவார்த்தைக்கு வரப்போவதில்லை என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. இதற்கிடையில் தான், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் நேற்று கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக் நேற்று நடைபெற்றது.
இந்தக்கூட்டத்தில், ஈரான் பாதுகாப்புத் துறை அமைச்சர் துணை அமைச்சர் ரெசா தலாய்-நிக் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "சுதந்திரமான நாடுகள், குறிப்பாக SCO அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளுடன் எங்களது தற்காப்பு ஆயுதத் திறன்களைப் பகிர்ந்து கொள்ள ஈரான் தயாராக உள்ளது. மேலும், அமெரிக்காவை வீழ்த்தியதில் ஈரானுக்குக் கிடைத்துள்ள அனுபவங்களை மற்ற உறுப்பு நாடுகளுக்கு வழங்கத் தயாராக இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், அமெரிக்கா இனி தனது கொள்கைகளை மற்ற நாடுகள் மீது திணிக்க முடியாது என்றும், உலகம் ஒரு துருவ அதிகார மையத்திலிருந்து பல துருவ அதிகார மையமாக மாறிவிட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். போரின் முடிவு இன்னும் எட்டப்படாத நிலையில், ஈரான் அமைச்சரின் இந்தப் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

