trump - iran
trump - iranweb

எங்க ராணுவம் அழிந்துவிட்டதா..? இனி தான் நிஜ ஆயுதங்களை இறக்கப்போறோம்.. அதிர்ச்சி கொடுத்த ’ஈரான்’!

எங்களிடம் உள்ள ஆயுத பலங்கள் பற்றி உங்களுக்கு ஒன்றும் தெரியாது, இனிமேல்தான் நிஜ தாக்குதல் நடக்கப்போகிறது என்று ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Published on
Summary

ஈரானின் ராணுவ வலிமை சிதைந்துவிட்டதாக ட்ரம்ப் கூறியதற்கு, “எங்கள் ஏவுகணைகள், ட்ரோன்கள், மூலோபாய உற்பத்தி மையங்கள் உங்களுக்குப் புலப்படாத இடங்களில் உள்ளன” என்று ஐஆர்ஜிசி பதிலடி கொடுத்துள்ளது. ஆரம்பத்தில் பின்னடைவு இருந்தாலும், ஏவுகணைத் தாக்குதல்கள், ஹர்முஸ் நீரிணை கட்டுப்பாடு மூலம் ஈரான் ஆதிக்கம் செலுத்துவதாக மதிப்பிடப்படுகிறது.

ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து தொடங்கிய போர் 32 நாட்களை கடந்து நீடித்து வருகிறது. இந்த போரில் ஈரானின் ஆயுத கிடங்குகள் மற்றும் முக்கிய ராணுவ தளவாடங்கள் அனைத்தும் தாக்கி அழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஏப்ரல் 2ம் தேதி பேசிருந்தார்.

Trump halts planned strikes on Iran energy sites for 5 days
அதிபர் ட்ரம்ப்pt web

மேலும், ஈரான் முற்றிலும் சிதைக்கப்பட்டதாகவும் போர் நிறுத்தம் குறித்த ஒப்பந்தித்திற்காக ஈரான் கெஞ்சுகிறதாகவும், அவர்களின் ஏவுகணைகள் உள்ளடக்கிய அனைத்து ஆயுதங்களும் முடிவடைந்துவிட்டதாகவும் ட்ரம்ப் பேசியிருந்தது பரபரப்பை கிளப்பியது. இத்தகைய சூழலில்தான், ட்ரம்பின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் எச்சரிக்கையும் விடுத்திருக்கிறது ஈரான்.

trump - iran
"அதிபர்ன்னா எல்லாம் பண்ணிட முடியுமா..?" டிரம்பை அதிரவைத்த தீர்ப்பு.. அதிரடி காட்டிய நீதிபதி!

அதாவது, ட்ரம்ப்பின் பேச்சுக்கு எதிர்வினையாற்றிய ஐ.ஆர்.ஜி.சி செய்தித் தொடர்பாளர், "எங்கள் பரந்த ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் மூலோபாய உபகரணங்களைப் பற்றி உங்களுக்கு ஒன்றும் தெரியாது. காரணம், நீங்கள் குறிவைத்ததாக நினைக்கும் மையங்கள் முக்கியத்துவம் அற்றவை, மேலும் எங்களின் மூலோபாய இராணுவ உற்பத்திகள் உங்களுக்குத் தெரியாத, நீங்கள் ஒருபோதும் சென்றடைய முடியாத இடங்களில் நடைபெற்று வருகிறது என்று பேசினார்.

மேலும், தங்களது மிகவும் மேம்பட்ட ஆயுதங்கள் வான்வழித் தாக்குதல்களால் பாதிக்கப்படவில்லை என்றும் பேசிருந்தார். கூடவே, எங்கள் ஆயுதங்களை அழித்துவிட்டதாக தவறாக எண்ணாதீர்கள், நீங்கள் தொடங்கிய இந்த தாக்குதல் மற்றும் ஆக்கிரமிப்புக்கு தகுந்த விலையை நிச்சயம் கொடுக்க வேண்டும் என்று அமெரிக்கா-இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன், அமெரிக்கா அவமானப்பட்டு சரணடையும் வரை இந்தப் போர் தொடரும் என்றும் ஈரான் ராணுவம் கடும் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் - அமெரிக்கா
ஈரான் - அமெரிக்காPt web

போர் தொடங்கிய ஆரம்பக்கட்டத்தில் ஈரான் சற்று பின்னடைவை சந்தித்திருந்தாலும் அதன் பிறகு போரில் ஈரான் தான் பெருமளவு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நேரடியாக ஏவுகணை தாக்குதல் நடத்துவதில் இருந்து, ஹர்முஸ் நீரிணையை முடக்கியது என மறைமுகமாவும் போரை தன்கட்டுப்பாட்டில் ஈரான் கொண்டுள்ளதாகவே பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில், தினந்தோறும் ஈரான் குறித்து ட்ரம்ப் சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்து வருவதும் அதற்கு ஈரான் மறுப்பு தெரிவிப்பதுடன் போரை மேலும் உச்சத்திற்கு கொண்டு போவோம் என பேசிவருவதும் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்திவருகிறது

trump - iran
ஹார்முஸில் காத்திருக்கும் 2,000 கப்பல்கள்.. 'உயிரைக் காப்பாற்றுங்கள்' - கதறும் மாலுமிகள்.!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com