\
Iran Provokes US with Shocking Video Targeting Melania Trump
Trump & Melaniaweb

அமெரிக்காவை சீண்டும் ஈரான்.. மெலனியா டிரம்ப் குறித்து வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!!

தொடர்ந்து 3 வது நாளாக அமெரிக்கா ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தியுள்ளது. இதற்கிடையில் ஈரான் அமெரிக்காவை சீண்டும் விதமாக மிரட்டல் விடுத்துள்ளது.
Published on

செய்தியாளர் - M. மீரா

அமெரிக்கா–ஈரான் இடையேயான பதற்றம் தொடர்ந்துவரும் நிலையில், கடந்த சில நாட்களாக நேரடி மோதலில் இடைநிறுத்தம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த சூழலிலேயே ஈரானில் வெளியிட்டுள்ள ஒரு பிரச்சார வீடியோ, அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகளை தீவிர எச்சரிக்கை நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

'மெலானியா டிரம்பை எப்படிக் கொல்வது' என்ற தலைப்பில் ஈரான் வெளியிட்டுள்ள இரண்டு நிமிட வீடியோவில், ட்ரம்பின் மனைவி மெலானியா டிரம்பை குறிவைத்து தாக்குதல் நடத்துமாறு ஆதரவாளர்களைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. மேலும், டொனால்ட் டிரம்பின் மகன் பாரனையும் மிரட்டும் வகையிலான காட்சிகளும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வீடியோவில், மெலானியா டிரம்ப் பயணம் செய்யும் இடங்கள், அவர் செல்வதாகக் கூறப்படும் ஆடை விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அவரது பாதுகாப்பு தொடர்பான சில விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வீடியோவின் இறுதியில், இது தொடக்கம் மட்டுமே; பாரன் டிரம்ப், காத்திரு என்ற மிரட்டல் வாசகமும் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

Melania & Trump
Melania & Trumpweb

இந்த விவகாரம் குறித்து அமெரிக்க சீக்ரெட் சர்வீஸ், தங்களுக்கு வீடியோ குறித்து தகவல் கிடைத்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. பாதுகாப்பில் உள்ள நபர்களுக்கு எதிரான எந்தவொரு அச்சுறுத்தலையும் தீவிரமாக விசாரிப்போம் என்று அமெரிக்க சீக்ரெட் சர்வீஸ் தெரிவித்துள்ளது. இருப்பினும், பாதுகாப்பு காரணங்களால் கூடுதல் விவரங்களை வெளியிட முடியாது என்றும் விளக்கம் அளித்துள்ளது.

இந்த வீடியோ உண்மையான மற்றும் உடனடி அச்சுறுத்தலா என்பது இதுவரை உறுதியாகவில்லை. எனினும், சமீபத்தில் ரானில் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினரை "இரத்தத்திற்கு இரத்தம்" என்ற வாசகத்துடன் சித்தரித்த விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டிருந்த சூழலில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது என்பதால், இதன் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.

ஈரான்–அமெரிக்கா பதற்றம் தொடங்கியதிலிருந்து டொனால்ட் டிரம்புக்கு எதிராக தொடர்ந்து மிரட்டல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கு பதிலளித்த டிரம்ப், தன்னை குறிவைத்து ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால், ஈரான் இதுவரை சந்திக்காத அளவிலான கடுமையான பதிலடி கொடுக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக ஏற்கனவே எச்சரித்திருந்தார். இந்த புதிய வீடியோ வெளியாகியிருப்பது, இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

Iran Provokes US with Shocking Video Targeting Melania Trump
செங்கடல் முதல் காஸ்பியன் வரை.. ஹார்முஸ் தாண்டி பரவும் ஈரான் போர்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com