\
Iran May Exit NPT, Vows to Continue Uranium Enrichment
ஈரான் அணுமின் நிலையம்Reuters

NPT-யில் இருந்து வெளியேறுகிறதா ஈரான்? அணு ஆயுதத்தை நோக்கி அடுத்த அடி?

அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தமான NPT-யில் இருந்து விலகுவது குறித்து ஈரான் பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
Published on: 

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அணு ஆயுதப் பரவலைத் தடுக்கும் சர்வதேச ஒப்பந்தமான NPT-யில் இருந்து வெளியேறுவது குறித்து அந்நாடு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் (NPT) என்பது, அணு ஆயுதங்கள் மேலும் பல நாடுகளுக்கு பரவாமல் தடுப்பதற்கான சர்வதேச ஒப்பந்தம் ஆகும். இதில் உறுப்பினராக இருக்கும் நாடுகள் அணு ஆயுதங்களை உருவாக்கக் கூடாது என்பதுடன், அணுசக்தியை அமைதியான நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கான உரிமையும் கொண்டுள்ளன. ஈரானும் இந்த ஒப்பந்தத்தில் 1970 முதல் உறுப்பினராக உள்ளது.

கோப்புபடம்
கோப்புபடம்Reuters

இந்தச்சூழலில் தான், NPT-யில் இருந்து விலகுவது குறித்து ஈரான் நாடாளுமன்றம் பரீசிலித்து வருவதாகவும், அதேசமயம், யுரேனியம் செறிவூட்டலில் உறுதியாக இருப்பதாகவும் ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் அலிரேசா சலிமி (Alireza Salimi) தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ஏற்கனவே, அணுசக்தி விவகாரம் தொடர்பாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய மோதம், 7 மாதங்களைக் கடந்தும் நீடித்து வருகிறது.

இந்தச்சூழலில், அணுசக்தி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (NPT) இருந்து ஈரான் விலகுவது, மத்திய கிழக்கில் மட்டுமின்றி, உலகளாவிய பாதுகாப்பிலும் புதிய பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

Iran May Exit NPT, Vows to Continue Uranium Enrichment
இரண்டு மெகா திட்டம்.. கூட்டணி அமைத்த ஏமன், சவூதி.. தப்பிக்குமா ஹவுதி?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com