இதற்கு முன் ஈரானில் அமெரிக்கா சந்தித்த பின்னடைவுகள்..!
அமெரிக்க படைகள் ஈரானில் அடைந்த சில பின்னடைவுகள் குறித்த சில விவரங்கள் வெளியாகி உள்ளன.
ஈராக்கிலுள்ள அமெரிக்க விமானப்படைத் தளங்கள் மீது ஈரானிலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. இதில் 80 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இரவு நேரத்தில் 22 ஏவுகணைகள் மூலம் இரு முகாம்களின் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆகவே ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பதற்றமான சூழல் அதிகரித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்று சந்தித்துள்ள பின்னடைவை போலவே வரலாற்றில் அமெரிக்கா இதற்குமுன் பின்னடைவை சந்தித்த சில சம்பவங்கள் நடந்துள்ளன. ஈரான் இதற்கு முன்னர் அமெரிக்க அதிபர் ஒருவரின் சதியை முறியடித்துள்ளது. 1979 ஆம் ஆண்டில், உச்சத்தலைவராக வலம் வந்த அயதுல்லா ருஹொல்லா கோமெய்னியின் கீழ் ஈரானியர்கள் தெஹ்ரானில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தாக்கி 52 தூதர்களை பிணைக் கைதிகளாகக் கொண்டு சென்றனர்.
இதில் பிணைக் கைதிகளாக சிக்கியவர்களை விடுவிப்பதற்காக அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்டர் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியை தழுவின. பின்னர் 1980 ஏப்ரல் மாதம் அமெரிக்க விமானப் பணியாளர்கள் சிலரும் கொல்லப்பட்டனர். பாலைவன பகுதிகளை சுற்றிப் பறந்த விமான ஒன்றும் சிதைக்கப்பட்டது. இது அமெரிக்க இராணுவத்திற்கு மறக்கமுடியாத ஒரு கறையாக அமைந்தது. ஈரான் மண்ணில் அமெரிக்கா அடைந்த இந்த பின்னடைவு, தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக விளங்கியது.
1981-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20-ஆம் தேதி அன்று ரொனால்ட் ரீகன் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்கும் வரை ஈரான் பிணைக் கைதிகளை விடுவிக்காமல் காத்திருந்தது. ரீகன் பதவியேற்ற பின்னர்தான் பிணைக்கைதிகளை ஈரான் விடுவித்தது. வரலாற்றில் பல ஆண்டுகளாகவே இந்த இரு நாடுகளுக்குமான பகை வளர்ந்து கொண்டேதான் வருகிறது.

