உலகம்
விழாவில் மது, டான்ஸ்: பெண்கள் உட்பட 230 பேர் கைது!
விழாவில் மது, டான்ஸ்: பெண்கள் உட்பட 230 பேர் கைது!
மது குடித்துவிட்டு நடனமாடிய 230 இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை ஈரான் போலீசார் கைது செய்துள்ளனர்.
இஸ்லாமிய நாடான ஈரானில் மது குடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தடையை மீறி மது விற்பனையும் குடியும் அந்நாட்டில் அதிகரித்துள்ளது. மது விருந்துகளுக்கும் அந்நாடு தடை விதித்துள்ளது.
இந்நிலையில் ஈரான் தலைநகர் தேஹ்ரானின் புறநகர் பகுதியில், அந்நாட்டின் பாரம்பரிய விழாவான, நீண்ட இரவு நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இதில் மது விருந்து நடந்ததாகக் கூறப்படுகிறது.
இதில் கலந்துகொண்ட 140 பேரும் மற்றொரு இடத்தில் கலந்துகொண்ட 90 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பல இளம் பெண்களும் அடக்கம். அவர்கள் மதுகுடித்துவிட்டு நடனம் ஆடியதாகக் கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து மதுபானங்களும் போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.