”ஒருபக்கம் அமைதினு சொல்லிட்டு.. காஸாவை அழிக்கவும் அமெரிக்கா வாய்ப்பு வழங்குகிறது” - ஈரான் அமைச்சர்

”காசாவை அழிக்க இஸ்ரேலுக்கு ஒரு வாய்ப்பை அமெரிக்கா கொடுக்கிறது” என ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இஸ்ரேல் ஹமாஸ் போர்
இஸ்ரேல் ஹமாஸ் போர்ட்விட்டர்

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் 7வது நாளாக நீடிக்கிறது. ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தி, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசித் தாக்கினர். அதன்பின்னர் இஸ்ரேல் அதிகாரபூர்வமாக போர் பிரகடனம் செய்து பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேல் - ஹமாஸ்
இஸ்ரேல் - ஹமாஸ்முகநூல்

காஸா பகுதியைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இஸ்ரேல் ராணுவம் அங்கு உணவு, நீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைத் துண்டித்து நகரை இருளில் ஆழ்த்தியிருப்பதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதனால் மருத்துவமனைகளில் சிகிச்சைகள் அளிக்கப்பட முடியாமல் மருந்துப்பொருட்கள் கிடைக்கப் பெறாமலும் காசா அவதிப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, இஸ்ரேல் தொடர்ந்து காசா மீது வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. அதேநேரத்தில், ’காசாவில் இஸ்ரேல் அரசு தரைவழி தாக்குதல் நடத்த முற்பட்டால், அதை தங்களால் தடுக்க முடியும்’ என ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

இதையும் படிக்க: 123 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் மீண்டும் கிரிக்கெட்.. மேலும் 4 விளையாட்டுகள் புதிதாக சேர்ப்பு!

இந்த நிலையில், ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன், ”காசாவை அழிக்க இஸ்ரேலுக்கு ஒரு வாய்ப்பை அமெரிக்கா கொடுக்கிறது. இது பெரிய தவறு. அமெரிக்கா ஒருபுறம் அமைதிக்காக அழைத்தாலும், மறுபுறம் தாக்குதல் நடத்தும் இஸ்ரேலையும் ஆதரிக்கிறது. இந்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் காசா மீது நடைபெறும் மனிதாபிமானம் அற்ற தாக்குதல்கள் முடிவுக்கு வரவேண்டும். லெபனானின் பாதுகாப்பும் அமைதியும் எங்களுக்கு முக்கியம். எங்கள் பயணத்தின் குறிக்கோள்களில் ஒன்று லெபனானின் பாதுகாப்பை வலியுறுத்துவதாகும்” என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் - ஹமாஸ் போர்
இஸ்ரேல் - ஹமாஸ் போர்முகநூல்

முன்னதாக அவர், “சவுதி அரேபியாவுடன் பாலஸ்தீனத்திற்கு எப்படி ஆதரவளிப்பது என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். காசாவில் இப்படியான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்தால், போர் எல்லா பக்கமும் விரைவடைதற்கான வாய்ப்புகள் அதிகம்” என எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் ஹமாஸ் போர்
"காஸாவில் தாக்குதல் தொடர்ந்தால்..." இஸ்ரேலுக்கு ஈரான் விடுத்த எச்சரிக்கை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com