\
iran war
iran war web

15 நாட்களில் 11 அமெரிக்க விமானங்கள் அழிப்பு..? ஈரான் புதிய பரபரப்பு தகவல்!

வளைகுடா தளங்களில் தரையிலேயே 11 அமெரிக்க போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் அழித்ததாக ஈரான் கூறியுள்ளது.
Published on

ஈரானியப் படைகள் அமெரிக்காவின் 11 போர் விமானங்களையும், ஹெலிகாப்டர்களையும் அழித்ததாக, இஸ்லாமியப் புரட்சிகரப் படைக் குழுவின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் ஹொசைன் மொஹெப்பி சனிக்கிழமையன்று தெரிவித்தார்.

செய்தியாளர் - M.மீரா

நிரந்தர போர் ஒப்பந்தத்தை டிரம்ப் ரத்து செய்த பின்னர் அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதல்கள் தீவிர மடைந்திருக்கின்றன. குறிப்பாக, ஈரானின் அணு மற்றும் ராணுவ கட்டமைப்புகளை குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியது. அதற்குப் பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்தும் ஹார்முஸ் நீரிணையைக் கடக்கும் எண்ணெய் கப்பல்களை குறிவைத்தும் ஈரான் தாக்குதல்களை மேற்கொண்டு வந்தது.

iran missile
iran missileweb

இவ்வாறு கடந்த 15 நாட்களில் நடந்த போரில் (ஜூலை 8 முதல் ஜூலை 22 வரை) வளைகுடாவில் உள்ள அமெரிக்கத் தளங்களில் நிறுத்தப்பட்டிருந்த 11 அமெரிக்கப் போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை ஈரானிய ஆயுதப் படைகள் தரையிலேயே அழித்தன என்று IRGC யின் செய்தித் தொடர்பாளரான பிரிகேடியர் ஜெனரல் ஹொசைன் மொஹேபி, சனிக்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

ஈரானின் தாக்குதல்களில், 17 உளவு மற்றும் செயல்பாட்டு ட்ரோன்கள் விமான தளத்தில் இருந்த ஒரு F-15 போர் விமானம், 6 ஏவுகணை தளங்கள், ஒரு P-8 விமானம், ஒரு C-17 சரக்கு விமானம் மற்றும் 8 எரிபொருள் நிரப்பும் விமானங்கள் ஆகியவை அழிக்கப்பட்டன என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

iran war
செங்கடல் முதல் காஸ்பியன் வரை.. ஹார்முஸ் தாண்டி பரவும் ஈரான் போர்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com