\
Amazon
Amazonweb

தீவிரமடையும் போர் | அணுமின் நிலையத் தாக்குதலுக்கு பதிலடி.. அமேசான் AWS-ஐ குறிவைத்த ஈரான்!

அமேசான் தொடர்புடைய தரவு மையம் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்கப் பாதுகாப்பு அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் கூறுகிறது.
Published on
Summary

அமெரிக்கா–ஈரான் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவத் தளம் மற்றும் அமேசான் பிரதான டேட்டா மையம் மீது ஈரான் பல குரூஸ் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ‘நஸ்ர்-2’ நடவடிக்கையின் 24-வது அலையாக நடந்த இந்த தாக்குதலுக்கு IRGC பொறுப்பேற்றுள்ளது. குவைத்தில் மின் உற்பத்தி, கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் தாக்குதலுக்கு உள்ளாகி, மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.

செய்தியாளர் ; M. மீரா

அமெரிக்கா–ஈரான் இடையேயான பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்தால், வளைகுடாவில் இருக்கும் நாடுகளில் உள்ள, அமெரிக்கப் படைகளால் பயன்படுத்தப்படும் அல்லது அவற்றுக்கு உதவி செய்யும் உள்கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

iran war
iran war web

இந்நிலையில் பஹ்ரைனில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளத்தை குறிவைத்து பல குரூஸ் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம், ஈரான் மற்றும் வாஷிங்டன் இடையேயான மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

பஹ்ரைனில் உள்ள அமெரிக்கத் தொழில்நுட்ப அமேசான்’ (Amazon) நிறுவனத்தின் பிரதானத் தரவு மையத்தின் (Data Infrastructure) மீது ஈரான் பல குரூஸ் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் சர்வதேச தொழில்நுட்பத் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க ராணுவத்திற்குத் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருவதாக பஹ்ரைன் கூறியிருந்த நிலையில், ஈரான் தனது நஸ்ர்-2’ (Operation Nasr 2) மூலம் 24-வது அலையாக இந்த தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மீதான தாக்குதலை நடத்தியுள்ளதாக ஈரானின் புரட்சிகரக் காவல் படை (IRGC) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

iran war
iran war web

இதற்கிடையில், பல மின் உற்பத்தி மற்றும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஈரானின் தாக்குதலுக்கு உள்ளானதாக குவைத் தெரிவித்துள்ளது; இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நான்காவது நாளாக நிகழ்ந்துள்ளன. ஈரானின் ‘தார்கோவின்’ (Darkhovin) அணுமின் நிலையத்தின் மீது அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாகவே, பஹ்ரைனில் உள்ள அமேசான் டேட்டா சென்டர் மற்றும் முகாரக் (Muharraq) பகுதியிலுள்ள அமெரிக்க ராணுவ வான் பாதுகாப்பு ரேடார்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com