\
Iran Braces for US Strikes, Distributes Iodine Tablets!
pickaxe mountain Reuters

மீண்டும் வெடிக்கபோகும் போர்.. மக்களுக்கு அயோடின் மாத்திரைகள் வழங்கிய ஈரான்!

அணுசக்தி மையங்களைச் சுற்றி அயோடின் மாத்திரைகள் வழங்கும் ஈரான்.
Published on: 

செய்தியாளர் - M.மீரா

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானில் அணுசக்தி நிலையங்களுக்கு அருகே வசிக்கும் மக்களுக்கு அயோடின் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ள நிலையில், இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Pickaxe Mountain
Pickaxe Mountainreuters

லண்டனில் இருந்து வெளியாகும் 'தி டைம்ஸ்' நாளிதழ் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஈரான் சுகாதார அமைச்சக அதிகாரி ஒருவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அல்ஜசீரா வெளியிட்ட செய்தியில், ஈரானில் அணுசக்தி நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் அயோடின் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருவதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை இனி நம்ப முடியாது என்றும், அவர் எந்த நேரத்திலும் தாக்குதலை நடத்தலாம் என்றும் அந்த அதிகாரி கூறியதாக அல்ஜசீராவின் செய்தி தெரிவிக்கிறது.

பொதுவாக அணுசக்தி நிலையங்களைச் சுற்றி 2 முதல் 3 கிலோமீட்டர் தொலைவில் வசிக்கும் மக்களுக்கு, போர் பதற்றம் அதிகரிக்கும் காலங்களில் இதுபோன்ற மாத்திரைகள் வழங்கப்படுவது வழக்கம் என்றும் அவர் விளக்கியுள்ளார்.

அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அத்தகைய சூழலில் கதிரியக்க அயோடின் தைராய்டு சுரப்பியைப் பாதிக்காமல் தடுப்பதற்காக பொட்டாசியம் அயோடைடு மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன.

Pickaxe mountain
Pickaxe mountain reuters

அணுசக்தி மையம் மீது தாக்குதல் நடத்த திட்டமா?

இதற்கிடையே, ஈரானின் மிகவும் பாதுகாப்பான அணுசக்தி மையங்களில் ஒன்றான 'பிகாக்ஸ் மவுண்டன்' (Pickaxe Mountain) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக ட்ரம்ப் ஏற்கவே தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, கடந்த வியாழக்கிழமை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது தேசிய பாதுகாப்புக் குழுவினருடன் ஆலோசனை நடத்தியுள்ளார். ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக ஃபாக்ஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Iran Braces for US Strikes, Distributes Iodine Tablets!
ட்ரம்பின் தேர்தல் பின்னடைவு.. தடுமாறும் எலான் மஸ்க்!